வாஸ்து நிபுணர்
P.M.கிருஷ்ண ராஜன்
8220544911
எந்தெந்த இராசிக்கு எந்தெந்த திசையில் வீடு அமைப்பு இருக்கலாம்?
கேள்வி :
எங்களுடைய வீட்டில் இந்த இந்த இராசிக்காரர்கள் இருக்கிறோம். நாங்கள் எந்த திசையில் உள்ள வீட்டிற்கு குடிபோக வேண்டும் அல்லது வீடு கட்ட வேண்டும் மற்றும் தலைவாசல் எந்த திசையில் வைக்க வேண்டும்?
பதில் :
ஒரு வீட்டில் தாய், தந்தை, மகள், மகன், மருமகள், மருமகன், பேரன், பேத்தி என்று பலபேர் வசிக்க கூடிய குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இராசி வரக்கூடும். சில சமயங்களில் மட்டுமே ஒரே இராசி ஒரே நட்சத்திரம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ மட்டுமே வரக்கூடும்.
ஆனாலும் தனிப்பட்ட இராசியுடையவரே பெரும்பான்மையாக இருப்பார்கள். ஒரு வீட்டில் ஆறு பேர், எட்டு பேர் உள்ள கூட்டு குடும்பத்தில் எட்டு பேருக்கும் உள்ள இராசிக்கு ஏற்ப எட்டு திசையிலும் வாசலும் வைக்க முடியுமா?
ஒரு வீட்டின் எஜமான் என்று சொல்லக்கூடிய தந்தையின் இராசிக்கோ அல்லது தாயின் இராசிக்கோ ஏற்ப வாசல் அமைப்பும் வீட்டு அமைப்பும் இருக்க வேண்டுமா? அல்லது பேரன், பேத்தி என்கிற அடுத்த தலைமுறையில் உள்ளவர்களின் இராசிக்கு ஏற்ப எந்த திசையில் வீட்டு அமைப்பு வாசல் இருக்க வேண்டும்.
இப்படி ஒரு கூட்டு குடும்பத்திலும் சரி, தனிப்பட்ட இரண்டு, மூன்று பேர் வசிக்க கூடிய வீட்டிலும் சரி, எந்த திசையில் வாசல், வீடு அமைப்பு இருக்க வேண்டுமென்றால் குழப்பம் மட்டுமே மிச்சமாக இருக்கிறது.
எனவே உங்களுடைய வீட்டில் எத்தனைபேர் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த பிரபஞ்சத்தை பொருத்தவரை இந்த பூமியின் மீது கட்ட கூடிய கட்டிட அமைப்பு மட்டுமே மிக மிக முக்கியமானது. இதில் எல்லோருக்கும் ஒத்துவரக்கூடிய பொதுவான திசைகள் உண்டு அதுதான் வடக்கு மற்றும் கிழக்கு.
நீங்கள் எந்த திசையில் வேண்டுமானாலும் வீடு கட்டி கொள்ளுங்கள். அதில் வாஸ்துவின் விதிகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதுதான் மிக முக்கியம். நீங்கள் கட்ட கூடிய வீடு வடக்கு பார்த்தது என்றால் கிழக்கு ஒட்டிய வாசல் அமைப்பும், கிழக்கு பார்த்த வீடு என்றால் வடக்கு ஒட்டிய வாசல் அமைப்பும், தெற்கு பார்த்த வீடு என்றால் கிழக்கு ஒட்டிய வாசல் அமைப்பும், மேற்கு பார்த்த வீடு என்றால் வடக்கு ஒட்டிய வாசல் அமைப்பும் சிறப்பை தரும்.
தெற்கு பார்த்த வாசல் வைக்கும்போது நேர் எதிரில் வடக்கும் வாசல் வைப்பது மிக சிறப்பு. அதேபோல் மேற்கு பார்த்த வாசல் வைக்கும்போது நேர் எதிரில் கிழக்கு திசையிலும் வாசல் வைப்பது சிறப்பு.
மேலும் அனுபவ அறிவுள்ள வாஸ்து நிபுணர்களால் மட்டுமே மிக சிறப்பாக உச்ச வாசல்கள் அமைத்து தரமுடியும்.