எட்டாம் வீட்டதிபதி ஒவ்வொருவீட்டிலும் இருந்தால் என்ன பலன்

                                                        எட்டாம் வீட்டதிபதி ஒவ்வொருவீட்டிலும் இருந்தால் என்ன பலன்

இவைகள்  ஒரு பொது ஜாதக விதிகள்…. சுய ஜாதகத்தை ஒப்பிட்டு குழப்பம் கொள்ளக்கூடாது… அவரவர் சொந்த திசா புத்திகள் வைத்தே நடப்புக்களை  கோட்சரங்கள், ராசிகளை வைத்து, லக்கினங்களை வைத்து இன்னும் எவ்வளவோ பார்த்தாலும் பலன் தோராயமாக நடக்கும் !

 

முதல் வீட்டில் : கடன் தொல்லையால் அவதிப் படுவார். துரதிஷ்டசாலி. உடல் மிகவும் பலகீனமாக இருக்கும்.

இரண்டாம் வீட்டில் : பலவிதமான தொந்தரவுகள் இருந்து வரும். கண், மற்றும் பல் தொந்தரவுகள் இருந்து வரும். குடும்பத்தில் சண்டையும். சச்சரவுகளும் இருந்து வரும்.

மூன்றாம் வீட்டில் : காது சம்மந்தமான பிரச்சனைகள் இருந்துவரும். இளைய சகோதரத்துடன் மனஸ்தாபங்களும், சண்டையும் இருந்து வரும்.

நான்காம் வீட்டில் : இருந்தால் மனதின் நிம்மதி பாதிக்கப்படும். பணப்பிரச்சனையுடன் மற்ற பிரச்சனைகளும் இருந்து வரும். தாயாரின் உடல் நிலையில் பாதிப்பு இருந்து வரும். ஸ்திர சொத்துக்களினாலும் தொந்தரவு இருந்து வரும். 8-ம் வீட்டின் அதிபதியுடன் இன்னும் சில பாபக் கிரகங்கள் சேர்ந்தால் ஸ்திரசொத்துக்கள் விற்க வேண்டிய நிலை உண்டாகும். 4-ம் வீடு ஒருவரின் வளர்ப்பு மிருகங்களையும் குறிக்கிறது அல்லவா? அவைகளுக்கும் வியாதி வந்து தொந்தரவு ஏற்படும். 4-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருந்தால் அவைகள் ஜீவன ஸ்தானமான 10-ம் வீட்டைப் பார்க்கும் அல்லவா? பாப கிரகங்கள் பார்த்தால் என்னவாகும்? தொழிலில் தொந்தரவுகள் இருந்து வரும்.

ஐந்தாம் வீட்டில் : 8-ம் வீட்டிற்குடைய கிரகம் இருந்தால் என்னவாகும்? 5-ம் வீடு புத்திர ஸ்தானமல்லவா? புத்திரர்களுக்குத் தொல்லையும் தீங்கும் ஏற்படும். 5-ம் இடம் புத்திஸ்தானம் அல்லவா? 8-ம் வீட்டு அதிபரும் இன்னும் சனி, செவ்வாய் போன்ற பாபக் கிரகங்களும் சேர்ந்தால் Hysteria போன்ற மன நோய்கள் வரக்கூடும். சிலருக்கு நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்களும் வரக் கூடும்.

ஆறாம் வீட்டில் : இது ஒரு நல்ல கிரக ஸ்தானம் அல்ல; அந்த கிரகத்தின் தசா, புக்திக் காலங்களில் உடல் நிலை பாதிப்பினால் பண விரையம் ஆவதுடன், அவகீர்த்தியான காரியங்களும் நடந்து வரும். கெளரவமும் பாதிக்கப் படும். 6-ம் வீடு தாய் மாமன் வீடல்லவா? தாய் மாமனுக்கு பலவகையிலும் பாதிப்பு இருந்து வரும்.

ஏழாம் வீட்டில் : ஆயுள் பாவம் பாதிக்கப் படும். 7-ம் இடம் களத்திர ஸ்தானம் அல்லவா? கணவன் அல்லது மனைவிக்கு உடல் பாதிப்பு இருக்கும். கணவன் – மனைவி உறவு பாதிக்கப்படும். 7-ம் இடமானது வெளி நாடு செல்லுதலையும் குறிக்கிறது அல்லவா? வெளிநாட்டிலும் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.

எட்டாம் வீட்டில் : ஆயுள் தீர்க்கமாக இருக்குமெனக் கூறலாம். 8-ம் வீடென்பது தகப்பனார் ஸ்தானமான 9-ம் வீட்டிற்குப் 12-ம் வீடல்லவா! ஆகவே அந்த கிரகத்தின் தசா, புக்தி காலங்களில் தகப்பனருக்கு உடல் நிலை பாதிக்கும். தகப்பனாருக்கு வீண் செலவுகள் இருந்து வரும். ஜாதகருக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வரும்.

ஒன்பதாம் வீட்டில் : ஜாதகருக்குத் தகப்பனார் அனுகூலமாக இருக்க மாட்டார்.

 

கிரகங்களின் பலன்கள்

 

சூரியன் : 8-ம் வீடு மறைவு ஸ்தானமாதலால் சூரியன் அங்கு மறைந்து விடுகிறார். ஆயுள் குறைவு, அரசாங்கத்திடமிருந்து உதவியின்மை, தகப்பனாருக்குத் தோஷம், கண் நோய், மனக் குழப்பம், செலவு ஆகியவை ஏற்படும்.

 

சந்திரன் : நீரில் கண்டம், கப நோய், ஆகியவை ஏற்படும். சந்திரன் மனதுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? மனபிராந்தி, மனது சம்மந்தமான நோய்கள் ஏற்படக்கூடும். சந்திரன் தாயாருக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? தாயாரால் இந்த ஜாதகருக்கு அனுகூலங்கள் மிகவும் குறைவாக இருக்கும். பிதுரார்ஜித சொத்துக்கள் எளிதாக கைக்கு வந்து சேரும். சந்திரனுடன் செவ்வாயும், சனியும் சேர்வார்களேயாகில் கண்பார்வை பாதிக்கப்படும்.

 

செவ்வாய் : விபத்துக்களால் மரணம் ஏற்படுக்கூடும்; பண நாசம் ஏற்படும்; குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு குடும்ப நிம்மதி பாதிக்கப் படும்.பைல்ஸ் போன்ற இரத்த சம்மந்தமான நோய்களால் அவதிப் படுவர்.

 

புதன் : மந்திர தந்திரங்களில் சிறந்து விளங்குவர்; கணித சாஸ்த்திரம், சட்ட நுணுக்கம், வியாபாரம் முதலியவற்றில் சிறந்து விளங்குவர்.

 

குரு : குரு எங்கு இருந்தாலும் அந்த வீட்டின் காரகத்துவத்தை அதிகரிக்கச் செய்வார் அல்லவா? 8-ம் வீடு ஆயுள்ஸ்தானமாகையால் அவர் ஆயுளை அதிகரிக்கச் செய்வார். உபாதையற்ற மரணம் ஏற்படும். புத்திர தோஷம் உண்டாகும்.

 

சுக்கிரன் : சுக்கிரன் 8-ம் வீட்டில் இருப்பது நல்லதே. செல்வம் உண்டாகும். வாழ்க்கைக்குத் தேவையான சகல செளக்கியங்களும் கிடைக்கும். ஜாதகருடைய கணவன் அல்லது மனைவிக்குப் பண நிலைமை நன்றாக இருக்கும். இளம்வயதில் பல ஏமாற்றங்கள் ஏற்பட்டு அதன் காரணமாக பக்தி மார்க்கத்தை நாடுவார்.

 

சனி : நீண்ட ஆயுள் உண்டு. ஜாதகரின் கணவன் அல்லது மனவிக்குப் பொருளாதாரம் சுகப்படாது. சொற்பக் குழந்தைகள். வாயுத் தொந்தரவு இருக்கும்;

 

ராகு : ராகு இருந்தால் பல தொந்தரவுகள் இருந்து வரும். பொதுவாழ்வில் நற்பெயர் இருக்காது. ராகுவுடன் சந்திரனும் கூட இருந்தால் மன நோயால் பீடிக்கப்படுவர்.

 

கேது : கேதுவுக்கு சுபர்கள் பார்வையோ அல்லது சுபர்களோ சேர்ந்து இருந்தால் தொந்தரவு எதுவுமில்லை. கெட்டவர்கள் சேர்க்கைஇருப்பின் நற்பயன் எதுவுமில்லை. சமயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தைக் கொடுப்பார்.