உயரமான மேற்கூரை (High ceiling) அமைப்பு வாஸ்துபடி சரியா?
வீட்டில் உயரமான மேற்கூரை (High ceiling) அமைப்பு , வீட்டின் எந்த பகுதியில் வருவது சிறப்பாக இருக்கும் என்கிற கேள்வியை முன் வைத்துள்ளார்கள்.
அன்பு நண்பர்களே பொதுவாக நாம் குடியிருக்கும் வீட்டிற்கு உயரமான மேற்கூரை (High ceiling) அமைப்பு வருவது மிகவும் தவறு. அவ்வாறு அமைப்பதால் ஏற்படும் தவறுகளைப் பற்றி பார்ப்போம்.
1. வடகிழக்கில் High ceiling என்றால், தென்மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு மூன்று பகுதியிலும் பள்ளமாக (தாழ்வாக) மாறி அந்த வீட்டில் குடியிருப்பவரின் வாழ்க்கை திசை மாறி போய் விடும்.
2. அந்த வீட்டில் ஆண்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.
3. மிகப்பெரிய விபத்துகள் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு.
4. தென்மேற்கில் High ceiling என்றால் வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு , பள்ளமாக மாறிவிடும். இந்த அமைப்பால் கணவன் மனைவி பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
5. வடமேற்கில் High ceiling என்றால் மற்ற மூன்று பகுதிகள் உயரமாக மாறிவிடும். இது போன்ற வீட்டு அமைப்பில் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் கடன் சுமை உண்டாக வாய்ப்புகள் அதிகம்.
6. வடமேற்கு High ceiling உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் தான் வெளிநாடுகளில் ஏற்றுமதி தொழில் செய்கிறார்கள்.
7. தென்கிழக்கு High ceiling என்றால் மற்ற மூன்று பகுதிகளிலும் தாழ்வாக மாறிவிடும். இந்த தவறினால் வீட்டில் வசிப்பவர்கள் நீதிமன்றம் (court), வழக்கு , தீ விபத்து, திருட்டு போன்ற இன்னல்களுக்கு ஆளாக வாய்ப்புகள் அதிகம்.
8. தென்கிழக்கு High ceiling உள்ள வீடுகளில் பெண் வாரிசு அரிதானதாக மாறி, ஆண்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதை நான் எனது அனுபவத்தில் கண்டுள்ளேன்.
குறிப்பு : High ceiling என்பது வியாபார தலங்களுக்கு வேண்டுமானால் பொருந்துமே தவிர வீடுகளுக்கு ஏற்புடையதல்ல.
வாஸ்து நிபுணர்
P.M.கிருஷ்ண ராஜன்
8220544911