உத்திர நட்சத்திர குணாதிசியங்கள்

                                                                         உத்திர நட்சத்திர குணாதிசியங்கள் !!

உத்திரம்
உத்திர நட்சத்திரத்தின் இராசி : சிம்மம் மற்றும் கன்னி
உத்திர நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன்
உத்திரம் முதல் பாதத்தின் இராசி அதிபதி – சிம்மம் : சூரியன்
உத்திரம் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் பாதத்தின் ராசி அதிபதி – கன்னி : புதன்

பொதுவான குணங்கள் :

  1. இனிமையாக பேசுக்கூடியவர்கள்.
  2. கல்வியில் நாட்டம் உடையவர்கள்.
  3. அழகான முக அமைப்பு உடையவர்கள்.
  4. முன் கோபம் உடையவர்கள்.
  5. உண்மையை பேசக்கூடியவர்கள்.
  6. நீராடுவதில் விருப்பம் உடையவர்கள்.
  7. தெய்வ நம்பிக்கை உடையவர்கள்.
  8. அழகிய நடை உடையவர்கள்.
  9. பிறருக்கு உதவும் இயல்பு உடையவர்கள்.
  10. செய்த உதவியை மறவாதவர்கள்.
  11. வாக்குறுதியை நிறைவேற்றும் குணம் கொண்டவர்கள்.
  12. உடல் நலத்தின் மீது அக்கறை இல்லாதவர்கள்.

உத்திரம் முதல் பாதம் :

இவர்களிடம் உத்திர நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. இனிமையாக பேசக்கூடியவர்கள்.
  2. உயர்ந்த குணம் உடையவர்கள்.
  3. உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்.
  4. மனத்தூய்மை உடையவர்கள்.
  5. தீய குணம் இல்லாதவர்கள்.
  6. உறவினர்கள் மேல் அன்பு உடையவர்கள்.

உத்திரம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் உத்திர நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. சேமிப்பில் வல்லவர்கள்.
  2. பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.
  3. கவனக்குறைவால் பொருளை இழப்பவர்கள்.
  4. பொறுமை இல்லாதவர்கள்.
  5. அலைபாயும் மனதை உடையவர்கள்.
  6. சுயநலம் உடையவர்கள்.

உத்திரம் மூன்றாம் பாதம் :

இவர்களிடம் உத்திர நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. நேர்மையானவர்கள்.
  2. வெற்றிக்காக எதையும் செய்யக் கூடியவர்கள்.
  3. கால்நடைகளால் இலாபம் அடைபவர்கள்.
  4. ஆணவம் கொண்டவர்கள்.
  5. ஆச்சாரம் உடையவர்கள்.
  6. தனிமையை விரும்புபவர்கள்.

உத்திரம் நான்காம் பாதம் :

இவர்களிடம் உத்திர நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. இவர்கள் நல்ல உழைப்பாளிகள்.
  2. செய்த உதவியை மறக்காதவர்கள்.
  3. மற்றவர்களை மதிக்கக்கூடியவர்கள்.
  4. பெருந்தன்மையான குணம் உடையவர்கள்.