உணர்வுகளின் ரகசியம்

உணர்வுகளின் ரகசியம்

 

ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது மற்ற எதையும்விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் , இக்கணத்தில் நீங்கள் உணரும் விதம்தான் உங்கள் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

 

உணர்வுகள்தான் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளுக்கான சக்தி.நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

 

நீங்கள் விரும்பும் அனைத்தும் அவை உங்களுக்கு வழங்கும் நல்ல உணர்வுகளால் தூண்டப்படுகின்றன.

  

உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பும் நல்ல விஷயங்களை நீங்கள் எப்படி பெறுவது??நல்ல உணர்வுகள் மூலமாகத்தான்

 

பணம் உங்களை விரும்புகிறது .ஆரோக்கியம் உங்களை விரும்புகிறது. மகிழ்ச்சி உங்களை விரும்புகிறது.நீங்கள் விரும்பும் அனைத்தும் விஷயங்களும் உங்களை விரும்புகின்றன.

 

இவை உங்கள் வாழ்விற்குள் வருவதற்காக ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கின்றன.

 

அவற்றை உங்களிடம் கொண்டு வருவதற்கு நீங்கள் நல்ல உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.

 

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் போராடவோ (அ) சண்டையிடவோ வேண்டியதில்லை.

 

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நல்ல உணர்வுகள் மூலமாக அன்பை வெளிப்படுத்துவதுதான். அப்போது நீங்கள் விரும்பும் விஷயங்கள் தோன்றும்.

முதலில் நீங்கள் மகிழ்ச்சியான விசயங்களை பெறுவதற்கு , முதலில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும்..உங்கள் வாழ்வில் நீங்கள் எதைப்பெற விரும்பினாலும் , முதலில் நீங்கள் அதைக் கொடுக்க வேண்டும்.