உடல் எடையை குறைக்கும் பச்சைப்பயறு தோசை

உடல் எடையை குறைக்கும் பச்சைப்பயறு தோசை

                                    உடல் எடையை குறைக்கும் பச்சைப்பயறு தோசை..!

 

தேவையானப் பொருட்கள்:

பச்சைப்பயறு – 2 கிலோ

வெந்தயம் – 2 டீஸ்பூன்

வெங்காயம் – 150 கிராம்

பச்சைமிளகாய் – 4

கறிவேப்பிலை – 1 கொத்து

எண்ணெய், உப்பு தேவைக்கேற்ப

 

செய்முறை :

பச்சைப்பயறுடன், வெந்தயம் சேர்த்து இரவில் ஊற வைக்கவும். நீரை வடித்துக் கொண்டு, கெட்டியாக இதை அரைக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை நறுக்கிக் கொள்ளவும்.

அரைத்த மாவை தோசைக் கல்லில் ஊற்றி, சிறிது எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் சிறிது தூவி விடவும். தோசையை மடித்து இருபக்கமும் வெந்ததும், எடுக்கவும்.