உங்கள் வாழ்க்கை முறை, கவலைகள், பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்பட வேண்டுமா?
* உண்ண உணவும், உடுத்த உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால், உலகில் உள்ள 75% மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய்.
* உனக்கு வங்கியில் பணமிருந்தால், அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள், நீயும் ஒருவன். உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை.
* உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.
* நினைத்த நேரத்தில், நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால்.. அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.
*நோயின்றி காலையில், புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலையே, உயிர் துறந்த பலரை விட நீ பாக்கியசாலி.
* பார்வையும், செவித் திறன், வாய் பேசாமை உள்ளிட்ட எந்த குறைபாடுகளும், இல்லாது நீ இருந்தால், அவ்வாறு உள்ள உலகில் உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய்.
* போர், பட்டினி, சிறைத்தண்டனை போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உலகில் உள்ள 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என அறிந்து கொள்.
*கொடுமைகளுக்கு உள்ளாகாமல், நீ விரும்பும் தெய்வத்தை தொழ முடிந்தால், உலகில் உள்ள 300 கோடி மக்களுக்கு கிடைக்காத சலுகையை நீ பெற்றுள்ளாய்.
* உன் பெற்றோரை பிரியாமல் அவர்களுடன் இருந்தால், நீ துன்பத்தை அறியாதவன் என்பதை புரிந்து கொள்..!!
* தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு தண்ணீர் கிடைத்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்.
உலகம் முழுதும், சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை.
* கல்வி அறிவு பெற்று, இந்த செய்தியை உன்னால் படிக்க முடிந்தால், உலக அளவில் எழுத படிக்க இயலாத 80 கோடிக்கும் மேல் உள்ளவர்களுக்கு கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய்.
* இணையத்தில் இந்த செய்தியை, உன்னால் படிக்க முடிந்தால், அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்..!!
* உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால், அவ்வாறு செய்ய இயலாத அளவுக்கு தைரியமும், நம்பிக்கையும் இல்லாதவர்களை விட, நீ கொடுத்து வைத்தவன்..!!
* நீங்கள் அனுபவித்து வரும், வசதிகளையும்.. தொழில் நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல், ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல், கோடிக்கணக்கானோர் இவ்வுலகில் இருக்க, ஆண்டவன் இவ்வளவு விசயம் உங்களுக்கு கொடுத்திருக்கும் போது, நீங்கள் அதிர்ஷடசாலி இல்லையா பின்ன..??
* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..!!!
வீண் கவலைகளை விட்டு,அந்த கவலைகளை காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள், போதை பொருட்கள் என்பவற்றை விட்டு விட்டு, நான் அதிர்ஷடசாலி என்ற தைரியத்தோடு
உங்களால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவுங்கள்.