உங்கள் வாய் பகுதியில் ஏதேனும் பிரச்சனையா?
- பசுவெண்ணையை உதடுகளில் ஒருநாளுக்கு இருமுறை தடவினால் உதடு வெடிப்பும், உதட்டுப் புண்ணும் குணமாகும்.
- தேங்காய் எண்ணையை நாள்தோறும் பலமுறை தடவினால் உதடு வெடிப்பு, உதட்டுப்புண், உதட்டில் தோல் உரிதல் ஆகியன குணமாகும்.
- திரிபலா சூரணத்தை வெந்நீரில் கரைத்து வாய் கொப்பளித்து வர வேண்டும்.
- மணத்தக்காளி பழத்தை மென்று சுவைத்து உண்ண வேண்டும்.
- தினம் நான்கு வில்வ இலைகளை மென்று விழுங்க வாய் துர்நாற்றம் நீங்கும்.
- காரட் சாறை பருகி வர வாய் துர்நாற்றம் நீங்கும்.
- தேனுடன் தேங்காய்ப்பால் கலந்து குடித்தால் வாய்ப்புண் குணமாகும்.
- கொப்பரை தேங்காய் கசகசா இரண்டையும் சேர்த்து அரைத்து பாலில் அதை போட்டுக் கொதிக்க வைத்து ஆறின பிறகு தடவி வந்தால் வாய்ப்புண் மறைந்து போகும்.
- தேங்காய் பாலைக் கொப்பளிக்க வாய்ப்புண் மாறும்.
- மருதாணி இலையை இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்க வாய்ப்புண் தீரும்.