உங்கள் முகம் பொலிவு பெற வேண்டுமா?
தினமும் தயிரை முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வர வறண்ட முகம், முகத்தில் காணப்படும் கோடுகள், முகத்தில் தென்படும் மேடு பள்ளங்கள் நீங்கி முகம் பிரகாசிக்கும்.
முகப்பரு மறைய தயிரில் கடலைமாவை கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் ஊறவைத்து பின் முகத்தை கழுவி வர முகப்பரு ஒழிந்து முகம் பொலிவு பெறும்.
நாள்தோறும் தயிரை முகத்தில் பூசி 10 நிமிடங்கள் ஊறவைத்து பின் முகத்தை கழுவி வர வறண்ட முகம், முகத்தில் தென்படும் கோடுகள், மேடு பள்ளங்கள் போன்றவைகள் மறைந்து முகம் ஜொலிக்கும்.
இளநீரில் சிறிது தயிர் கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து முகம் கழுவி வர முகம் பொலிவடையும் கரும்புள்ளிகளும் மறையும்.
உலர்ந்த துளசி, வேப்பிலை, புதினா ஆகிய இலைகளை எடுத்து கொஞ்சம் மஞ்சள் தூள் கலந்து பன்னீருடன் சேர்த்து அரைத்து கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி வர கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகாகும்.
நல்லெண்ணையில் வெள்ளைபூண்டு, துத்தி இலை இவைகளை போட்டு காய்ச்சி முகப்பரு மீது தடவி வர முகப்பரு மறையும்.
இரவில் பாலில் சீரகம், கருஞ்சீரகம் இவைகளை ஊறவைத்து காலையில் அரைத்து முகத்தில் தடவி ஊறிய பின் கழுவி வர முகம் பளபளக்கும்.
பாலேடை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து கழுவிய பின் கடலைமாவை முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் முகம் மென்மையாகும். முகம் பளபளக்கும்.
முகத்தில் தென்படும் கரும்புள்ளிகள் மறைய புதினாவை அரைத்து அவற்றுடன் தேன், எலுமிச்சை சாறு இவற்றை குழைத்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவி வர கரும்புள்ளிகள் மறையும்.
கசகசாவை பாலில் அரைத்து முகத்தில் தேய்த்து வர கரும்புள்ளிகள் மறையும்.