உங்கள் பிரச்சனை தீர வாஸ்துபடி சரியான வீட்டின் அமைப்புகள்

உங்கள் பிரச்சனை தீர வாஸ்துபடி சரியான வீட்டின் அமைப்புகள்..!

 

கேள்வி :

அய்யா வணக்கம் எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது முதல் குழந்தை  குறை மாதத்தில் இறந்தே பிறந்தது. இரண்டாவது குழந்தை மூன்று மாதத்தில் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.என்னுடைய ஜாதகத்தில் பூர்வீகம் ஆகாது என்று கூறியதால் நான் வாடகை வீட்டில் உள்ளேன்.ஒரு சிலர் உங்கள் வீட்டில் செய்வினை பில்லி சூனியம் போன்ற பிரச்சனைகள் இருக்கிறது என்கிறார்கள் . குழப்பமான நிலையில் உள்ள எண்ணை தெளிவுபடுத்துங்கள்.

 

பதில் :

அன்பு நண்பரே கவலை வேண்டாம் உங்களுடைய பூர்வீகம் போலவே நீங்க குடி போகக்கூடிய  அனைத்து வாடகை வீடுகளும் ஒரே மாதிரி அமையும் என்பதை என்னால் ஆணித்தரமாகக் கூற முடியும் காரணம் உங்களுக்கு உங்களுடைய பூர்வீகத்தில் என்ன தவறு இருக்கிறது என்பதை உங்களால், கண்டுபிடிக்க முடியாது காரணம் உங்களுக்கு வாஸ்து தெரியாது, நீங்கள் செல்லுமிடமெல்லாம் உங்களுடைய நிழல் உங்களை பின் தொடர்வது போல உங்களுடைய பிரச்சனைகளும் உங்களைப் பின் தொடரும்.

வாஸ்து தெரிந்த ஒரு நிபுணரை ஆலோசித்து பிறகு உங்கள் வீட்டில்  என்ன தவறு இருக்கிறது என்பதை கண்டுபிடித்து அந்த தவறை தவிர்த்து நல்ல வீடு பார்த்து குடி போக வேண்டும்,

அதேபோல் உங்களுடைய ஜாதகத்தில் நான்காம் இடம் உங்களுடைய வீடு என்று கூறுவார்கள் அதில் நீங்கள் வாடகை வீட்டில் இருக்க வேண்டுமா சொந்த வீட்டில் இருக்க வேண்டுமா மாடி வீட்டில் இருக்க வேண்டுமா கூரை வீட்டில் இருக்க வேண்டுமா போன்ற விவரங்களையும் கூட தெளிவாக கூற முடியும் அதே போல் பூர்வபுண்ணியம் என்று சொல்லக்கூடிய இடத்தில் உங்களுக்கு யோகம் இருந்தால் மட்டுமே தாத்தா சொத்தையோ அப்பா சொத்தையோ அனுபவிக்க முடியும்.

வாஸ்து ரீதியாக உங்க வீட்டின் தவறான அமைப்புகளான,..

  1.  தென்கிழக்கு முற்றிலும் தவறான அமைப்பில் இருக்கும்.
  2. ஆறு, ஓடை, குளம், குட்டை, கழிவுநீர் தொட்டி, கிணறு, ஆள்துளை கிணறு,தண்ணீர் தொட்டி போன்ற அமைப்புகள் வரும் போதும் இது போல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
  3. தென் மேற்கிலும் உங்க வீட்டில் நிறைய தவறுகள் இருக்கும்.
  4. தெற்கு நடுப்பகுதியிலும் நிறைய தவறுகள் அமைப்பு இருக்கும்.
  5. தெற்கு பகுதியிலும் கிழக்கு பகுதியிலும் மேற்கு பகுதியிலும் காம்பவுண்டு இல்லாத அமைப்புகள் கூட இருக்கலாம்.
  6. உங்கள் வீட்டிற்கு தென்கிழக்கு கிழக்கு தெருக்கூத்து மற்றும் தெரு பார்வை இருக்கலாம்.
  7. ஊருக்குப் பொதுவான உயரமான தண்ணீர் தொட்டி அமைப்புகள் கூட உங்க வீட்டிற்கு தென்கிழக்கு ,தெற்கு நடுப்பகுதி போன்ற பகுதிகளில் வரலாம்.
  8. தென்கிழக்கு கிழக்கு முற்றிலும் மூடப்பட்டு பகுதியாக இருக்கும் போது மூடநம்பிக்கையின் மீது அதிக நம்பிக்கை இருக்கும்.
  9. வடகிழக்கு முற்றிலும் மூடப்பட்டு பகுதியாக இருக்கும் பொழுதும் அவர்களுக்கு மூடநம்பிக்கையின் மீதும் அதீத நம்பிக்கை இருக்கும்.

நான் மேற்கூறிய விஷயங்கள் உங்கள் வீட்டில் சரி செய்யாத பொழுது உங்களுக்கு பிரச்சினை என்பது தொடரும்.