உங்கள் கண்கள் அழகு பெற வேண்டுமா

உங்கள் கண்கள் அழகு பெற வேண்டுமா?

 

  1. கண்கள் பொலிவு பெற மற்றும் கண் பார்வை வளம் பெற தக்காளிப்பழத்தை வேக வைக்காமல் பச்சையாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  2. திராட்சை பழம் கண்களுக்கு ஊட்டம் தருகிறது.
  3. கண்கள் பளபளக்கவும், பொலிவுடனும் இருக்க தினமும் இரவில் கண் இமைகளில் விளக்கெண்ணை ஒன்று அல்லது இரண்டு சொட்டு விட்டு வர வேண்டும்.
  4. இரண்டு சொட்டு தூய்மையான தேங்காய் எண்ணெய்யை வாரம் ஒரு முறை கண்களில் விட்டு வர கண்கள் நன்கு பிரகாசமாக இருக்கும்.
  5. பாதாம் பருப்புகளை பாலுடன் சேர்த்து அரைத்து கண்களை சுற்றி பேக் போட்டு வருவதால் கண்ணின் கருவளையம் நீங்கி அழகாகும்.
  6. வெள்ளரிக்காயை அறைத்தோ அல்லது வட்டவடிவில் நறுக்கியோ கண்களின் மீதும், கண்களை சுற்றி பேக் போட்டும் வர கண்ணிற்கு குளிர்ச்சியும் பிரகாசமும் கிடைக்கும்.
  7. திரிபலா சூரணத்தை சாப்பிட்டு வந்தாலும் கண் பார்வை நன்றாக இருக்கும்.
  8. கண்களை தினமும் பன்னீரால் துடைத்து வர கண்கள் புதுப்பொலிவு பெறும்.
  9. வாரம் இருமுறை இரவில் ஒரு துளி சுத்தமான விளக்கெண்ணையை கண்களில் விட்டு வந்தாலும் கண்கள் குளிர்சிபெரும்.
  10. வெண்ணையுடன் கொத்தமல்லி சாறை கலந்து கண்களுக்கு பேக் போடா கண்கள் கருவளையம் நீங்கி பிரகாசமாக இருக்கும்.
  11. பாதாம் பருப்புகளை வறுத்து அடிக்கடி உண்டு வர கண் பார்வை தெளிவு பெறும்.
  12. கண்கள் நலமாக இருக்க காரட், பொன்னாங்கண்ணி, திராட்சை , பப்பாளி , பேரீட்சை, சாத்துக்குடி, வெள்ளரி, இளநீர், ஆவாரம்பூ , நெல்லிக்காய் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  13. ஆப்பிள் பழத்தை நறுக்கி சுத்தமான தேனில் நனைத்து சில வாரங்கள் சாப்பிட்டு வர கண்கள் அழகு பெறும். சிறந்த ஒளி பெறும்.
  14. திருநீற்று பச்சிலையைச் சாற்றில் சங்கைநன்றாக உறைத்து பூசினால் கண் கட்டி குறையும்.
  15. கண்களுக்கு ஒளி பெருக தான்றிக்காய் பொடி 14 ஸ்பூன் அளவு தேனில் கலந்து காலையில் சாப்பிட்டு வர வேண்டும்.