இறைவன் பக்தி என்பது என்ன

இறைவன்  பக்தி என்பது என்ன ?

இப்போதெல்லாம் பக்தி என்பது தினமும் கோவிலுக்கு சென்று விளக்கேற்றுவதும் விழுந்து விழுந்து கைகூப்பி கும்பிடுவதும் எங்கோ காடு மலையில் கோவிலையெல்லாம் தேடிபிடித்தும் மாபெரும் நிகழ்வுகளுக்குச் சென்று செல்பி எடுத்துக்கொள்வதுமே பக்தி என்கிறார்கள்……..

இதுவா பக்தி?

உங்களின் கஸ்டம் தீர பேப்பரில் இருந்து பேஸ்புக் வரை சுற்றிக்கொண்டிருக்கும் அத்தனை இலவச பரிகாரங்களையும் செய்த பின்னரும் கூட கஸ்டம் தீரவில்லையென ஆதங்கப்படுகிறீர்களே அதுவா பக்தி?

அன்னதானம் என்கிற பெயரில் மூன்று வேளை சாப்பாட்டிற்கு எந்த கவலையும் படாமல் பசியின் தன்மை அறியாதவனுக்கு பகட்டாய் அளிக்கிறீர்களே தானம் அதுவா பக்தி??

உள்ளொன்றே இறைவனிருக்க வெளியொன்றே வெட்டிக்கதை பேசி விட்டு கோவிலுக்கு போய்வந்தோமென கணக்கு காட்டுகிறீர்களே இதுவா பக்தி……

பக்தி என்பது சுயநலமற்ற அன்பு கடவுளின் மீது செலுத்துவது தான் பார்க்கும் எல்லா கடவுளையும் வணங்குகிறீர்கள்……..அதைக்கொடு இது சரியாக வேண்டும் என்று கேட்கிறீர்கள் ஆனால் குலதெய்வத்தை மறந்து விடுகிறீர்கள்……

முதலில் எந்த கடவுளானாலும் அவரின் மீது ஆத்மார்த்தமாக அன்பு செலுத்துங்கள் அவரின் பாதத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள் அவன்மீது நம்பிக்கை வையுங்கள்…. இல்லாதவனுக்கு கொடுத்து உதவும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்ளுங்கள்…..

நீங்கள் அனுபவிக்கும் கஷ்டம் என்பது அவரவர் கர்ம விதிப்பலனே.. தர்மத்தாலே கர்மம் போகும்…ஆகையால் கடவுளின் பேரைச்சொல்லியாவது தன்னால் முடிந்த தானத்தை செய்து வாருங்கள்..அதையும் தாண்டி சிக்கல் தொடர்ந்தால் வேறு வித பரிகாரங்களை நாடலாம்……

பக்தி என்பது பகட்டுக்கு இல்லை ஆத்மார்த்த அன்பிற்காக மட்டுமே கடவுள் ஏங்குகிறான்…