இடம் வாங்கும் போது வாஸ்து பார்க்க வேண்டுமா

இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே" என்கிற பாடல் வரி வாஸ்துவில் 100மூ உண்மை. ஒருவர் வாங்கக்கூடிய இடத்தை பொறுத்தே அவருடைய வீடு அமைகிறது அதை தொடர்ந்தே அவருடைய வாழ்க்கையும் அமைகிறது.

முதல் தரமான மனை

⭐ வடக்கு, கிழக்கு இருபுறமும் ரோடு அமைப்புள்ள மனையே, முதல் தரமான மனை. இதில் மட்டுமே மிகமிகச் சரியான அமைப்பில் வாஸ்து குறையில்லாமல் வீடு கட்ட முடியும். உங்களுடைய உழைப்புக்கு மேல் ஊதியம் கிடைக்கும்.

இரண்டாம் தரமான மனை : 

⭐ தெற்கு, மேற்கு இருபுறமும் உள்ள ரோடு அமைப்புகளில் வரக்கூடிய மனை இரண்டாம் தரமான மனை. இதுபோல் உள்ள இடங்களில் வாஸ்துபடி வீடு அமைப்பது மிக சிரமம்.

இடம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள் : 

1. ரோடு அமைப்புகள்.

2. தெரு குத்து, தெரு பார்வை.

3. தென் மேற்கு உயரம், வடகிழக்கு பள்ளம்.

4. ஆறு, ஓடை, குளம், குட்டை போன்ற நீர்நிலைகள்.

5. மலை, குன்று, கோவில், கோபுரம், ஊருக்கு பொதுவான தண்ணீர்தொட்டி அமைப்புகள்.

6. ர்iபா றயல மேம்பாலங்கள்.

7. இரயில்வே லையன். 

⭐ மேற்கூறிய இவைகள் ஒரு இடத்தில் சாதகமாக அமைந்தால், அதுவே 50மூ வாஸ்து உங்களுக்கு அமைந்து விட்டது என்று அர்த்தம். நாம் வாங்கக்கூடிய இடம் சதுரம், செவ்வகமாக மட்டுமே இருக்க வேண்டும். அதாவது 30ழூ60, 30ழூ40, 30ழூ50 இதுபோன்ற அளவுகளில் இருப்பது சிறப்பு.

⭐ 20ழூ50, 20ழூ60 போன்ற அளவுகளில் இடம் வாங்கினால் வாஸ்துபடி வீடு கட்டுவது கடினம்.