ஆறாம் பாவ காரகங்கள்

ஆறாம் பாவ காரகங்கள்

 

சத்ரு பாவமெனும் 6 ஆம் பாவகாரகங்களைப்பற்றி பார்ப்போம் :

 

எதிரிகள் – வழக்கு விவகாரங்கள் – நோய்கள் – காயங்கள் – கடன்கள் – எதிர்தரப்பினர் – திருடர்கள் – பயங்கள் – போட்டியாளர்கள் – சந்தேகங்கள் – கவலைகள் – தொல்லைகள் – பலமின்மை – மிகுந்த செல்வ நிலை – தாய் மாமன் – சேவை – தொழிலாளர்கள் – நல்ல உடல்நிலை -திருட்டுக்கு எதிரன பாதுகாப்பு – ஏமாறுதல் – சரியாகப் புரிந்து கொள்ளாமை – போர் – தீ – இடையூறுகள் – கபம் – உடலில் ஏற்படும் வீக்கம் – கொடுஞ்செயல் – மனநோய் – பகை – கட்டி – கருமித்தனம் – நோயுடன் இருத்தல் – பால்வினை நோயால் ஏற்படும் புண் – வெப்பம் – சமைக்கப்பட்ட சோறு – களைப்படைதல் – பழிச்சொல் – பகைவரின் மகிழ்ச்சி – எலும்புருக்கி நோய் -மனக்கவலை – கடுமையான வேதனைகள் – பலருடன் பகைத்தல் – தொடர்ச்சியான கண் நோய் தொந்திரவு – பிச்சை எடுத்தல் – நேரம் தவறி உணவு அருந்துதல் – படகில் இருந்து இடரி விழுதல் – பங்களிகளால் தொல்லைகளும் – அச்சமும் – இலாபம் – சோர்வுநிலை – நஞ்சு – கடும் வயிற்றுவலி – விலகிடுதல் – சுயமரியாதை காப்பாற்றுதல் – சிறுநீரகக் கோளாறு – அறுசுவைகள் – கண்டனம் – ஆபத்து – சிறைச்சாலை உடன் பிறப்புடனும் – மற்றவர்களுடனுமான கருத்து வேறுபாடு – குழந்தைப் பருவம் – நோயால் ஆபத்து – மற்றவர்களுக்கு சேவை செய்வதால் கிடைக்கும் வருமானம் – குடியிருப்பு வட்டார சேவையில் வெற்றி பெறுதல் – பக்தி மயம் மற்றும் உள்ளுணர்வு சக்தி – வேலையாட்களால் இலாபம் – சிறு மிருகங்களுடன் வெற்றி – இந்த பாவத்தில் சந்திரனின் தாக்கத்தினை சிறப்பாகக் கண்ணுறுதல் அவசியமாகிறது – உடன் இருப்பவர்கள் – வேலக்காரர்கள் மற்றும் பணியாளர்களுடனான பொதுவான வெற்றி நிலை – சேவை அல்லது பணியின் நிலை இந்த பவத்தால் அறியப்படுகிறது. பாதிப்படையும் பொதுவான உடல்நிலை மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள் ஆகியவற்றையும் குறிக்கிறது.

 

ஸ்திர இராசியாகி 6 இல் சந்திரன் பாதிப்படையும் போது,

மார்புச் சளியும் – சிறுநீரகக் கல்லும் ஏற்படுகிறது. சர இராசியானால் – நரம்புக் கோளாறுகள் மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்படுகின்றன – நுரையீரலில் ஆபத்து மற்றும் தீராத வியாதிகளை 6 ஆம் வீடு உபய இராசியாகும் போது அளிக்கிறது.

 

சூரியன் – யுரேனஸ் – இராகு – கேது – நெப்டியூன் ஆகியவற்றின் பாதிப்பு வீரியக் குறைவு – அஜீரணம் மற்றும் உடல் நிலையில் பாதிப்புகளைத் தருகின்றன. பாதிக்கப்பட்ட செவ்வாய் மிகுந்த ஆத்திரமடையும் நிலையையும் அளிக்கிறது. குருவின் பாதிப்பு – கல்லீரல் மற்றும் இரத்தப் பிரச்சனைகளையும் – புதன் ஜீரணக் கோளாறு- பல் வலிகளையும் – சுக்கிரன் தோல் வியாதியையும் தருகின்றனர்.