ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஜன்னல்கள்
மழைகாலங்களில் ஜன்னல்கள்:
ஆனால் நமது நண்பர்கள் இதுபோன்ற மழை காலங்களில் அவர்களுடைய வீட்டு ஜன்னல்களையும், கதவுகளையும், திறக்காமல் பார்த்துக் கொள்வார்கள் காரணம்
1.குளிர் உள்ளே வந்துவிடும்
2. கொசு வந்துவிடும்
என்ற இரண்டு காரணங்களால் வீட்டை அடைத்து வைத்திருப்பார். இது நடை முறை வாழ்க்கையில் நடைபெறும் விஷயம் தான். ஆனால் நமது வீட்டில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ஜன்னல்களை இரண்டு நாட்களுக்கு மேல் திறக்காமல் இருப்பதால் அந்த வீட்டினுள் வசிக்கக் கூடியவர்கள் சுறுசுறுப்பை இழந்து சோம்பேறிய மாறி விடுவார்கள்.
வாஸ்து படி ஜன்னல்கள்:
வடக்கு ஜன்னலை மூடுவதால் அவர்களுக்கு வருமானம் என்பது கேள்வி குறியாகிவிடும். கிழக்கு ஜன்னலை மூடுவதால் ஆரோக்கியம் என்பது கேள்வி குறியாகிவிடும்.
எனவே நண்பர்களே பகல் பொழுது முழுவதும் உங்களுடைய வீட்டு ஜன்னல்களை திறந்து வைத்திடுங்கள். இரவு நேரத்தில் மட்டும் அடைத்து வைத்திடுங்கள்.
வடகிழக்குப் பகுதியில் ஜன்னல்கள் இருந்தும் திறக்காத வீடுகள் நான் நிறைய பார்த்திருக்கிறேன். அது போல உள்ள வீட்டில் நீங்கள் இருந்தால் இதற்கு பிறகாவது ஜன்னல்களை திறந்து வையுங்கள். என்ன மாற்றம் நிகழ என்று கூர்ந்து கவனித்து வாருங்கள்.
நான் இங்கு குறிப்பிடுவது வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ஜன்னல் அமைப்புகளே ! மற்ற பகுதிகளில் ஜன்னல் அமைப்புகள் இருந்தாலும் வாஸ்து ரீதியாக எந்த பலனும், நன்மைகளும் கிடையாது. 82205-44911