ஆயில்யம் நட்சத்திரம் மற்றும் அதன் குணாதிசயங்கள்

                                                              ஆயில்யம் நட்சத்திரம் மற்றும் அதன் குணாதிசயங்கள் !!

ஆயில்யம் 

ஆயில்யம் நட்சத்திரத்தின் இராசி : கடகம்
ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதி : புதன்
ஆயில்யம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி – கடகம்: சந்திரன்

பொதுவான குணங்கள் :

1. பொருட்சேர்க்கையில் விருப்பம் கொண்டவர்கள்.
2. எடுத்த செயலை சொன்ன முறையில் நிறைவாக முடிக்கும் திறன் கொண்டவர்கள்.
3. பல திறமைகளை கொண்டவர்கள்.
4. பிறரை கட்டுபடுத்துவதில் விருப்பம் கொண்டவர்கள்.
5. எண்ணிய வாழ்க்கையை எண்ணிய விதம் வாழ்வார்கள்.
6. விருப்பம் போல் வாழக்கூடியவர்கள்.
7. பெற்றோர் மீது விருப்பம் கொண்டவர்கள்.
8. மனதில் துன்பம் கொண்டவர்கள்.
9. கடுமையான சொற்களை பேசக்கூடியவர்கள்.
10. எவரையும் ஏளனம் செய்யும் இயல்பு கொண்டவர்கள்.
11. தர்ம நியாயத்தை கடைப்பிடிப்பவர்கள்.
12. திட்டமிட்டு செலவு செய்வதில் வல்லவர்கள்.

ஆயில்யம் முதல் பாதம் :

இவர்களிடம் ஆயில்ய நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

1. வீரம் உடையவர்கள்.
2. சாமர்த்தியசாலிகள்.
3. ஆராய்ச்சி பணிகளில் விருப்பம் கொண்டவர்கள்.
4. கீர்த்தியை விரும்புபவர்கள்.
5. மிகுந்த வாக்கு பலிதம் உள்ளவர்கள்.

ஆயில்யம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் ஆயில்ய நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

1. சுகபோக வாழ்க்கை வாழ ஆசைப்படுபவர்கள்.
2. விரும்பிய வாழ்க்கையை அடைய எதையும் செய்யக்கூடியவர்கள்.
3. தவறுகளையும் நியாயப்படுத்துவார்கள்.
4. எழிலான தோற்றம் கொண்டவர்கள்.
5. முன் கோபம் கொண்டவர்கள்.

ஆயில்யம் மூன்றாம் பாதம் :

இவர்களிடம் ஆயில்ய நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

1. தீய சொற்களை பேசக்கூடியவர்கள்.
2. தன்னைத் தானே கெடுத்துக் கொள்ளக்கூடியவர்கள்.
3. மெதுவான போக்கை கொண்டவர்கள்.
4. கர்வம் மற்றும் கோபம் கொண்டவர்கள்.

ஆயில்யம் நான்காம் பாதம் :

இவர்களிடம் ஆயில்ய நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

1. அசட்டுதனமான நம்பிக்கை கொண்டவர்கள்.
2. சொத்துகளை அழிப்பவர்கள்.
3. எதற்கும் அஞ்சாதவர்கள்.
4. இவர்கள் அறிவாளிகள். ஆனால் மந்தமான போக்கை கொண்டவர்கள்.
5. எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள்.
6. நோய் உடையவர்கள்.