வருமான வரி தாக்கல் செய்யும் இணையதளத்தில் முதல் உள்நுழைய வேண்டும். உள்நுழைந்த பிறகு ஆதார் எண்ணை இணைக்கும் பாப் அப் திரை வரும். அப்படி இல்லை என்றால் ஆதார் எண்ணை பான் என்னுடன் இணைக்கவும் என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
படி 2
அதார் எண்ணை உள்ளிடும் முன்பு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டில் உள்ள பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்ற விவரங்கள் சரியாக இருக்கின்றதா என்பதைச் சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
படி 3
ஒரு முறை அனைத்து விவரங்களையும் சரி பார்த்த பிறகு ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். பின்னர் இணைக்கவும் என்ற பொத்தானை அழுத்தவும்.
படி 4
சரிபார்ப்பு முடிந்த உடன் ஆதார் எண் பான் எண்ணுடன் இணைக்கப்படும். இதில் முக்கியக் குறிப்பு என்னவென்றால் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்கள் இரண்டின் வரங்களும் சரியாக ஒத்துப் போனால் மட்டுமே இணைப்பு நடக்கும்.
நன்மை
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலமாக வருமான வரி தாக்கல் செய்யும் போது ஐடிஆர் V படிவத்தைப் பெங்களூரில் உள்ள வருமான வரி அலுவலகத்திற்கு அனுப்ப தேவையில்லை. மின்னணு சரிபார்ப்பு குறியீடு முறையைப் பயன்படுத்தி எளிதாகப் படிவத்திற்கான ஒப்புகையை அளிக்க முடியும்.
எப்படி வருமான வரி தாக்கல் செய்யும் இணையத் தளத்தில் இருந்து மின்னணு சரிபார்ப்பு குறியீடு பெறுவது?
மின்னணு தாக்கல் செய்யும் முறையைத் தேர்வு செய்து மின்னணு சரிபார்ப்புக் குறியீட்டை உருவாக்கவும் என்று உள்ளிட வேண்டும். மின்னணு சரிபார்ப்பு குறியீடு உருவாக்கப்பட்ட உடன் அது உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். இதனைப் பயன்படுத்தி 72 மணி நேரத்தில் மின்னணு சரிபார்ப்புச் செய்ய வேண்டும்.