ஆண்வாரிசு இல்லாமல் போவதற்கும், வாஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டா

ஆண்வாரிசு இல்லாமல் போவதற்கும், வாஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டா?

 ஆண்வாரிசு இல்லாத (அதாவது பெண் சொத்தாக) அமைவதற்கு அவர்களின் வீட்டின் அமைப்பில் என்னென்ன தவறுகள் இருக்கிறது என்பதை பார்ப்போம். 

 இன்றைக்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமஉரிமை என்ற நிலை வந்துவிட்டது. அதேபோல பெண்களும் நாங்கள் ஒன்றும் ஆண்களுக்கு இளைத்தவர்கள் அல்ல என்கிற நிலைபாட்டினை உருவாக்கிவிட்டார்கள். ஆனாலும் இன்றைக்கு நமது சமுதாயத்தில் ஆண்வாரிசைதான் தன்னுடைய வாரிசாக கருதுகிறார்கள். இன்றைக்கும் தனக்கு ஆண்வாரிசு வேண்டும் என்கிற நோக்கத்தில் இரண்டாவது திருமணம் செய்யும் ஆட்களும் உண்டு.

ஆண்வாரிசு இல்லாத வீட்டு அமைப்புகள் :

1. வடகிழக்கு, கிழக்கு வளர்ந்த அமைப்புள்ள வீடுகள்.

2. வடமேற்கு, மேற்கு வளர்ந்த அமைப்புள்ள வீடுகள்.

3. தென்மேற்கு கட்டான அமைப்புள்ள வீடுகள்.

4. கிழக்கு முழுவதும் மூடிய வீடுகள்.

5. தென்கிழக்கு, கிழக்கு தெருகுத்து, தெருபார்வை உள்ள வீடுகள்.

6. வடமேற்கு, மேற்கு தெருகுத்து, தெருபார்வை உள்ள வீட்டு அமைப்புகள்.

7. தென்மேற்கு, மேற்கு மற்றும் தெற்கு தெருகுத்து அல்லது தெரு பார்வை அமைப்புகள்.

8. தெற்கும், மேற்கும் சேரக்கூடிய சாலை அமைப்புள்ள மனைகள்.

9. தென்மேற்கு உள்மூலை படி அமைப்பு.

10. தென்மேற்கு high celling, low celling அமைப்பு.

11. தென்மேற்கு பூஜையறை, கழிவறை, சமையலறை அமைப்புகள்.

12. தென்மேற்கு வாசல் மற்றும் போர்டிகோ அமைப்புகள்.

 இதையும் தாண்டி இன்னும் குறிப்பிடும்படியான சில அமைப்புகள் உண்டு. இங்கு பெண் சொத்து என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, ஒரு ஆண் மகனுக்கு மாமியார் வீட்டு சொத்து என்று கூட கூறலாம். பல இடங்களில் மருமகன்தான் அவர்களை பாதுகாக்க வேண்டிய சுழல் நிலவுகிறது.