அஸ்வினி நட்சத்திரம்

அஸ்வினி நட்சத்திரம் !!

அஸ்வினி :

நட்சத்திரத்தின் இராசி : மேஷம்.

நட்சத்திரத்தின் அதிபதி : கேது.

இராசியின் அதிபதி : செவ்வாய்.

பொதுவான குணங்கள் :

  1. செவ்வாய்க்கு உரிய கோபம் மற்றும் பிடிவாத குணம் கொண்டவராக இருப்பார்கள்.
  2. சண்டையில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும் அயராத உழைப்பை கொண்டு வெற்றி பெற வேண்டும் என்னும் தீவிரம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  3. பெண்களிடம் இனிமையாக பேசக்கூடியவர்.
  4. இவரை அவமதித்தால் மனதில் பழிவாங்கும் எண்ணம் உடையவராக இருப்பார்கள்.
  5. தவறுக்காக மன்னிப்பு கேட்கும் இயல்பு உடையவர்கள்.
  6. எந்த காரியத்தையும் தைரியத்துடன் செய்து முடிப்பவராக இருப்பார்கள்.
  7. தனது தாய் தந்தையர் மீது ஓரளவு பாசம் உடையவராக இருப்பார்கள்.
  8. அழகும், முரட்டுச் சுபாவமும் உடையவராகஇருக்கக்கூடும்.

அஸ்வினி முதல் பாதம் :

இவர்களிடம் அஸ்வினியின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. அதிக கோபம் மற்றும் பிடிவாத குணம்.
  2. அடிக்கடி சண்டையில் ஈடுபடுவது.
  3. சொத்து சேர்க்கை உண்டாகும்.
  4. எடுத்த காரியத்தில் வெற்றி.

 

அஸ்வினி இரண்டாம் பாதம் :

இவர்களிடம் அஸ்வினியின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. சாந்தகுணம் மற்றும் பொறுமைசாலியாக இருப்பார்கள்.
  2. மனைவியின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.
  3. உயர்ந்த புகழ் மற்றும் கௌரவத்தை அடைவார்கள்.

அஸ்வினி மூன்றாம் பாதம் :

இவர்களிடம் அஸ்வினியின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. இவர்கள் தைரியசாலிகளாக இருப்பார்கள்.
  2. சாதுர்யமான பேச்சுத் திறமை கொண்டவர்கள்.
  3. கல்வி மற்றும் நுட்பமான ஆராய்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.
  4. வாதம் செய்வதில் வல்லவர்கள். கற்பனையில் சிறந்தவர்கள்.
  5. அன்னையின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.

அஸ்வினி நான்காம் பாதம் :

இவர்களிடம் அஸ்வினியின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. பிறரை அடக்கி ஆளக்கூடிய சக்தி கொண்டவர்கள்.
  2. முன் கோபம் உடையவர்கள்.
  3. தர்ம சிந்தனையும், தெய்வ பக்தியும் உடையவர்கள்.
  4. அரசுடன் தொடர்புடைய துறைகளில் ஈடுபாடு இருக்கும்.