அவிட்ட நட்சத்திரம் !!
அவிட்டம் :
அவிட்ட நட்சத்திரத்தின் இராசி : மகரம் மற்றும் கும்பம்
அவிட்ட நட்சத்திரத்தின் அதிபதி : செவ்வாய்
அவிட்ட நட்சத்திரத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் பாதம் இராசி அதிபதி (மகரம்) : சனி
அவிட்ட நட்சத்திரத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் பாதம் இராசி அதிபதி (கும்பம்) : சனி
பொதுவான குணங்கள் :
1. சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டவராய் இருப்பார்கள்.
2. பலனை எதிர்பாராமல் உதவும் எண்ணம் கொண்டவர்கள்.
3. ஆரோக்கியத்தை பேணுவதில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள்.
4. அதிக எச்சரிக்கை உணர்வு உடையவர்கள்.
5. சிக்கனத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள்.
6. நேர்மையான தொழிலை செய்பவர்கள்.
7. யாருக்கும் பயப்படமாட்டார்கள்.
8. தியாக மனப் பான்மை உடையவர்கள்.
9. ஊன் விரும்பி உண்பார்கள்.
10. பெற்றோர் மீது அன்பு கொண்டவர்கள்.
11. அழகான தோற்றம் உடையவர்கள்.
12. புத்திக்கூர்மை உடையவர்கள்.
13. பிறரின் பொருளை விரும்பானதவர்கள்.
14. செல்வமும், செல்வாக்கும் உடையவர்கள்.
15. கம்பீரமான தோற்றம் உடையவர்கள்.
16. வைராக்கியமான மனதை கொண்டவர்கள்.
17. கோபமும், நிதானமும் உடையவர்கள்.
18. மனைவியின் பேச்சுக்கு மதிப்பளிக்கக் கூடியவர்கள்.
அவிட்டம் முதல் பாதம் :
இவர்களிடம் அவிட்ட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
1. ஆடம்பர செலவுகளை தவிர்ப்பவர்கள்.
2. பசி தாங்க இயலாதவர்கள்.
3. இளகிய மனம் உடையவர்கள்.
4. பலமான தேகம் கொண்டவர்கள்.
5. செல்வாக்கு நிறைந்தவர்கள்.
6. செல்வம் உடையவர்கள்.
அவிட்டம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் அவிட்ட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
1. வஞ்சக எண்ணம் உடையவர்கள்.
2. உண்மையை உரைக்கக்கூடியவர்கள்.
3. சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.
4. விடாமுயற்சி கொண்டவர்கள்.
5. பூஜை புனஸ்காரத்தில் நம்பிக்கை உடையவர்கள்.
6. கொடுப்பதில் சிறந்தவர்கள்.
அவிட்டம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் அவிட்ட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
1. நல்ல குணங்களை உடையவர்கள்.
2. இளைத்த உடல் அமைப்பு கொண்டவர்கள்.
3. திடமான மனம் கொண்டவர்கள்.
4. நம்பிக்கை உடையவர்கள்.
5. சிவந்த நிறம் உடையவர்கள்.
அவிட்டம் நான்காம் பாதம் :
இவர்களிடம் அவிட்ட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
1. அதிர்ஷ்டம் உடையவர்கள்.
2. எதையும் ஆராய்ந்து செய்யக்கூடியவர்கள்.
3. சாத்தியமற்ற வித்தியாசமான எண்ணங்களை உடையவர்கள்.
4. கர்வம் கொண்டவர்கள்.
5. எதையும் தைரியத்துடன் செய்யக்கூடியவர்கள்.