அவிட்ட நட்சத்திரம் !!
அவிட்டம் :
அவிட்ட நட்சத்திரத்தின் இராசி : மகரம் மற்றும் கும்பம்
அவிட்ட நட்சத்திரத்தின் அதிபதி : செவ்வாய்
அவிட்ட நட்சத்திரத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் பாதம் இராசி அதிபதி (மகரம்) : சனி
அவிட்ட நட்சத்திரத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் பாதம் இராசி அதிபதி (கும்பம்) : சனி
பொதுவான குணங்கள் :
- சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டவராய் இருப்பார்கள்.
- பலனை எதிர்பாராமல் உதவும் எண்ணம் கொண்டவர்கள்.
- ஆரோக்கியத்தை பேணுவதில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள்.
- அதிக எச்சரிக்கை உணர்வு உடையவர்கள்.
- சிக்கனத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள்.
- நேர்மையான தொழிலை செய்பவர்கள்.
- யாருக்கும் பயப்படமாட்டார்கள்.
- தியாக மனப் பான்மை உடையவர்கள்.
- ஊன் விரும்பி உண்பார்கள்.
- பெற்றோர் மீது அன்பு கொண்டவர்கள்.
- அழகான தோற்றம் உடையவர்கள்.
- புத்திக்கூர்மை உடையவர்கள்.
- பிறரின் பொருளை விரும்பானதவர்கள்.
- செல்வமும், செல்வாக்கும் உடையவர்கள்.
- கம்பீரமான தோற்றம் உடையவர்கள்.
- வைராக்கியமான மனதை கொண்டவர்கள்.
- கோபமும், நிதானமும் உடையவர்கள்.
- மனைவியின் பேச்சுக்கு மதிப்பளிக்கக் கூடியவர்கள்.
அவிட்டம் முதல் பாதம் :
இவர்களிடம் அவிட்ட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- ஆடம்பர செலவுகளை தவிர்ப்பவர்கள்.
- பசி தாங்க இயலாதவர்கள்.
- இளகிய மனம் உடையவர்கள்.
- பலமான தேகம் கொண்டவர்கள்.
- செல்வாக்கு நிறைந்தவர்கள்.
- செல்வம் உடையவர்கள்.
அவிட்டம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் அவிட்ட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- வஞ்சக எண்ணம் உடையவர்கள்.
- உண்மையை உரைக்கக்கூடியவர்கள்.
- சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.
- விடாமுயற்சி கொண்டவர்கள்.
- பூஜை புனஸ்காரத்தில் நம்பிக்கை உடையவர்கள்.
- கொடுப்பதில் சிறந்தவர்கள்.
அவிட்டம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் அவிட்ட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- நல்ல குணங்களை உடையவர்கள்.
- இளைத்த உடல் அமைப்பு கொண்டவர்கள்.
- திடமான மனம் கொண்டவர்கள்.
- நம்பிக்கை உடையவர்கள்.
- சிவந்த நிறம் உடையவர்கள்.
அவிட்டம் நான்காம் பாதம் :
இவர்களிடம் அவிட்ட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- அதிர்ஷ்டம் உடையவர்கள்.
- எதையும் ஆராய்ந்து செய்யக்கூடியவர்கள்.
- சாத்தியமற்ற வித்தியாசமான எண்ணங்களை உடையவர்கள்.
- கர்வம் கொண்டவர்கள்.
- எதையும் தைரியத்துடன் செய்யக்கூடியவர்கள்.