அமோகா நியூமராலஜி
நியூமராலஜி என்றால் என்ன?
எண்களுக்கும்,எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்பே நியூமராலஜி எனப்படும். இது இயற்கையில் உண்மையான நிலைபாடுகளை வெளிப்படுத்தி மனிதன் வாழ்க்கையினை தன் வசம் ஆக்கிக் கொள்கிறது.
நியூமராலஜியை (எண்கணிதத்தை) படிப்பவர்கள் எண்களையும், எழுத்துக்களையும் குறியீட்டாக படிக்கிறார்கள். இது ஒரு குறிப்பிட்ட நபரைக் குறித்த ஆளுமை தன்மை, தனித்தன்மைகள், உள்ளார்ந்த தேவைகள், மற்றும் உணர்ச்சிகளின் எதிர்வினைகள் உட்பட குணநலன்களை தீர்மானிக்க பெரும்பாலும் பயன்படுத்தபடுகிறது.
மேலும் நியூமராலஜி (எண்கணிதம்) என்பது நாம் பிறந்த தேதிக்கு ஏற்றார்போல் நம் பெயரை பொருத்தமான எண்ணில் அமைத்து கொள்வதேயாகும். அவ்வாறு நம் பிறந்த தேதிக்கு ஏதுவாக நம் பெயர் அமையும் பட்சத்தில் நமது வாழ்க்கையில் நினைத்த காரியங்கள் கைகூடும் மற்றும் பல நன்மைகள் நம்மை வந்து சேரும்.
உலகில் பிறந்த மக்களில் 20% மக்கள் தான் நிறைவான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். மீதம் 80%மக்கள் போராட்டம் கலந்த வாழ்க்கையினையே எதிர்கொள்கிறார்கள். ஏன் என்று ஆராய்ந்து பார்க்கும் போது அந்த 20% மக்கள் பெயரானது இயற்கையிலேயே பிறந்த தேதிக்கு ஏற்ப பொருத்தமான எண்ணில் அமைந்திருப்பது தான் காரணம்.
ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் போராட்டம் கலந்த வாழ்கையை அனுபவிக்க தமது குழந்தைகளுக்கு நியூமராலஜி (எண்கணித) முறைப்படி பெயரை அமைத்து கொண்டு எல்லா காலகட்டத்திலும் நடக்கக்கூடிய நன்மையை பெற்று மகிழ்ச்சி மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வோம்.
வாழ்க வளமுடன்
சி.விஜய் விமந்தன் -9092768787