சூரியபகவானும்சந்திரபகவானும் இணைந்து இருந்தால் அமாவாசை திதியாகும் இந்த அமாவாசை திதியில் பிறந்தவர்கள் ஜாதகத்தில் சூரியபகவான் ஆட்சி,உச்சம்,நட்பு பெற்று இருந்தால் ஜாதகரின் உடல் நிலை,ஆத்மா சக்தி ,ஜாதகரின் புகழ் நன்றாகவே இருக்கும்..ஆனால் சூரியபகவான் நீசம்,பகைப் பெற்று இருந்தால் தந்தையின் உறவுகள் பாதிக்கும் ,தந்தையும் புகழ் இல்லாதவராகவே இருப்பார்…சந்திரபகவான் ஆட்சி,உச்சம் பெற்று இருந்தால் ஜாதகரின் மனநிலை,மற்றவர்களுடன் பழகும் தன்மையும் நன்றாகவே இருப்பார்கள்…ஆனால் சந்திரபகவான் நீசம் பெற்று அவர் இருக்கும் இராசியும் இயற்கை அசுபர் பாவமாகவும் அமைந்தால் ஜாதகரின் மனநிலையில் தெளிவு இருக்காது,எந்தமுடிவும் அடிக்கடி மாற்றக்கூடிய நிலையில் இருப்பார்,தாய் உறவுகள்,உடல் நிலையும்கூட பாதிக்கக்கூடிய நிலையைத் தரும்….#சூரியபகவானும்சந்திரபகவானும் இணைந்துள்ள நிலையில் இதில் எதாவது ஒருக் கிரகம் ஆட்சி-உச்சம் பெற்று இருந்தால் ஜாதகர் தனித்தன்மை பெற்று புகழ் ,அறிவாற்றல்,வாழ்க்கையில் ஒருக் குறிக்கோள் உடன் திகழ்வார்..நன்றி..