அதிகப்படியான பிரபலத்துக்கும், பிரச்சனைக்கும் என்ன காரணம்?
அதிகப்படியான பிரபலத்துக்கும், அதிகப்படியான பிரச்சனைக்கும் உள்ள வாஸ்து தொடர்புகள் !!
கேள்வி : ஐயா, வணக்கம் ! நான் கடந்த நான்கு வருடங்களில் தமிழகம் முழுவதும் பிரபலமாக தெரியும்படியான தொழில் செய்து வந்தேன். அதேபோல் என்னிடம் 3000 பேர் வேலை செய்தார்கள், ஆனால், இன்று எனக்கு தொழில் நடக்கவில்லை. என்னிடம் இன்று 20 பேர் மட்டுமே வேலை செய்கின்ற நிலையில் உள்ளேன். என்னுடைய வீட்டமைப்பில் மற்றும் அலுவலகத்தில் எதுபோல தவறுகள் இருக்கும் சொல்லுங்கள் ஐயா, நான் சரிசெய்து கொள்கிறேன்.
புதில் : அன்பு நண்பரே ! கவலை வேண்டாம். நான் இங்கு குறிப்பிடும் அமைப்புகள் உங்கள் இடத்தில் இருந்தால் இதுபோல பாதிப்புகள் நிச்சயம் ஏற்படும்.
1. தென்மேற்கு தெற்கு, மேற்கு தெருகுத்து வருவது.
2. தென்மேற்கில் பூஜையறை வருவது.
3. தென்மேற்கில் சமையலறை வருவது.
4. தென்மேற்கில் முக்கிய கேட் அல்லது முக்கிய வாசல் வருவது.
5. வடகிழக்கு முற்றிலும் மூடிய அமைப்பு உள்ள இடங்களை வாடகைக்கு எடுப்பது.
6. தென்மேற்கில் உள்மூலை படி அமைப்பு வருவது.
7. தென்மேற்கில் முக்கிய அலுவலகமோ அல்லது மாஸ்டர் பெட்ரூம் பயன்படுத்தாமல் இருப்பது.
8. தென்மேற்கில் 'யு" வடிவமான கட்டிட அமைப்பாக இருப்பது.
9. தென்மேற்கு முக்கோணம் போன்ற அமைப்பில் இருப்பது.
10. தென்மேற்கும், தென்கிழக்கும் இரண்டு அறைகளுக்கு நடுப்பகுதியில் தடுப்பு அல்லது சுவர் இல்லாமல் இருப்பது.
11. வடக்கு முழுவதும் அடைபட்ட வீட்டில் குடியிருப்பது.
12. வடமேற்கு வடக்கு தெருகுத்து, தென்கிழக்கு கிழக்கு தெருகுத்து வருவது.
13. உங்களுடைய வியாபாரம் நல்ல சிறப்பாக நடந்து கொண்டு இருக்கும் போது தவறான இடங்களை வாங்குவது.
அன்பு நண்பரே ! நான் மேற்குறிப்பிட்ட இந்த அமைப்புகளில் உங்களுடைய இடத்தில் நிச்சயம் இருக்கும். இதுபோல இடங்கள் 2 முதல் 4 வருட காலம் மட்டும் தொழிலை உலகம் முழுவதும் பிரபலப்படுத்திவிட்டு சிறிது நாளில் அனைத்தையும் தடுத்து வேறு திசைக்கு மாற்றி விடுகிறது. நான் மேற்குறிப்பிட்ட இடங்களில் சினிமாதுறை, அரசியல் துறை, வியாபாரிகள், கல்வி நிறுவன அதிபர்கள், டாக்டர்கள், ஆன்மிகவாதிகள், ஜோதிடர்கள் வசிக்க நேர்ந்தால் சிறிது காலம் கண்டிப்பாக பிரபலமானவர்களாக திகழ்வார்கள்.
இப்படி திகழ்வதற்கான காரணம் அவர்களின் வீட்டமைப்பே என்பது எனது அனுபவம்கூட. 82205-44911