வெற்றிப் பாதை என்பது

வெற்றிப் பாதை என்பது ?

வெற்றிக்கு ஒரு எண்ணப்பாதை

நாம் எதை விரும்புகிறோமோ அந்த எண்ணத்தை ஆழ்மனத்தில், நிகழ்காலத்தில் புகுத்திவிட்டால், அதை மனம் உண்மையாக ஏற்றுக்கொள்கிறது.

எமிலிகூ என்ற பிரெஞ்சு மனமருத்துவரும் அதைத்தான் கூறினார், "நான் வளர்ந்து வருகிறேன். முன்னேறி வருகிறேன், என் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது" என்று நிகழ்காலத்திலேயே மனத்துடன் பேசவேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

இது ஆழ்மனத்தில் நிகழும் நிக ழ்ச்சியாகப் பதிவாகிறது. மனம் அதை நம்புகிறது.

மனம் எதை நம்புகிறதோ அது வாழ்வில் உண்மையாக நடைபெறத் துவங்குகிறது.

மனம் நம்பத் துவங்கியதும் (புலியைக் கண்டு பயந்தவனுக்கு ஏற்படும் உடல் மாற்றம் போல) நமது சூழ்நிலையில் மாற்றங்கள் நிகழ்கின்றன.

நமது லட்சியங்களும், ஆசைகளும், எத்தனைக்கு எத்தனை தீவிரமாக – உணர்ச்சி கலந்து பதியவைக்கப படுகின்றன

விவேகானந்தர் "நீருக்குள் அமுங்கியிருப்பவனுக்கு வெளிவர ஏற்படும் துடிப்பு" அந்தத் துடிப்பு இருக்கும் போது எண்ணங்கள் வலிமை பெறுகின்றன.

ஒரு சமயத்தில் ஏற்படும் ஆழ்ந்த உணர்ச்சிக்கு ஈடாக, நாம் பலமுறை தினந்தோறும்

நமது லட்சியங்களை எண்ணுவதன் மூலம் வலுவடையச் செய்யலாம்.

நமது லட்சியம் ஈடேறுவது என்பது நமது தெளிவான லட்சியத்தையும், அதில் நமக்குள்ள ஈடுபாட்டையும் நமது லட்ச்சியத்திலிருந்து வழுவாத நமது உள்ள உறுதியையும் நினைவு மூலம் நமது ஆழ்மனத்திற்கு நாம் மாற்றும் எண்ண வலிமையையும் (பிரார்த்தனையையும்) பொறுத்ததாகும்.

வெற்றிக்கு மற்றொரு பாதைகூட இருக்கிறது. இதை 'எண்ண இணைப்பு' என்றும், முன்னைய நினைவு இணைப்பு

ஏதாவது சாதிக்க வேண்டிய தைரியம்

கைமுன் இருக்கும்போது, நாம் நமது பழைய வெற்றிகளை, சாதனைகளை நினைவு கூரவேண்டும்

நாம் அடைந்த பழைய வெற்றிகளை நினைவுகூரும் போது, நம்மனம் பழைய சம்பவங்களில் திளைக்கிறது.

 

பழைய சாதனை – ஒளி நிறைந்த வெற்றிப்பாதை

அதை நினைவு கூர்ந்து புதிய காரியத்தைச் செய்யும் போது, நாம் இரண்டையும் இணைத்து விடுகிறோம்.

புதிய காரியம் பழைய எண்ணப் பாதையில் சென்று வெற்றியைக் கொண்டுவருகிறது.

கைமேலுள்ள காரியத்தையும் பழைய வெற்றியையும் எண்ணும்போது, இரண்டும் இணைந்து புதிய காரியம் பழைய பாதையில் நடை போடுகிறது. வெற்றியைத் தருகிறது.

 

வெற்றிப் பாதை என்பது ஒரு மனநிலை

ஒரு வெற்றியை அடைந்ததும் நம் மனத்திற்கு நம்மீதே நம்பிக்கை ஏற்படுகிறது.

நமது குழந்தைகளின் வாழ்வில், சிறுசிறு வெற்றி என்ற வாய்ப்புகளை ஏற்படுத்துவது  வெற்றி மனநிலையை அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தும்