வெந்தைய கீரை கடையல்
தேவையான பொருட்கள் :
வெந்தைய கீரை – ஒரு கட்டு
துவரம் பருப்பு – நான்கு கை அளவு
நடுத்தரமான வெங்காயம் – 1
நடுத்தரமான தக்காளி – 1
பச்சை மிளகாய் – 10
புளி – ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள் – 1/4 ஸ்பூன்
நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்யும் முறை :
வெந்தைய கீரையை கழுவி, இலையை மட்டும் ஆய்ந்து கொள்ளவும், தண்டினை அகற்றி விடவும்.
அழுத்த சமையல் கலனில் (Pressure Cooker) துவரம் பருப்பு, வெந்தைய கீரை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புளி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து 250 மில்லி தண்ணீரை ஊற்றி வேக வைக்கவும். நான்கு சீட்டி (whistle) வரும் வரை காத்திருக்கவும்.
நீராவி அழுத்தம் அடங்கும் வரை காத்திருக்கவும். (10-15 நிமிடம்)
பிறகு சமையல் கலனை திறந்து தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.
மத்து கட்டை அல்லது மசி கட்டை கொண்டு நன்றாக கொதித்த கரைசலை மசிக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை சேர்க்கவும், கடுகு சேர்த்து வெடிக்க விடவும், கருவேப்பில்லை சேர்க்கவும்.
ஒன்று நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்கவும். சுவையான வெந்தைய கீரை கடையல் தயார்.