வீட்டு அமைப்பில் உள்ள வாஸ்து தவறுகள்

வீட்டு அமைப்பில் உள்ள வாஸ்து தவறுகள்?

ஐயா வணக்கம் நாங்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஒரு சிறு கிராமம் எங்களது வீட்டில் சில வாரங்களுக்கு முன்பு என்னுடைய சகோதரன் மின்சார ஷாக் அடித்து இறந்து விட்டான். ஆறு மாதங்களுக்கு முன்பு எனது தந்தை புற்றுநோயால் இறந்து விட்டார் .அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு எனது பாட்டி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

நானும் சென்னையில் வேலை பார்த்து கொண்டிருந்தேன் எனது சகோதரன் இறந்த பிறகு என்னுடைய வேலையை  விடக்கூடிய சூழ்நிலையில் நான் இருக்கிறேன்.

இதற்கு எங்க வீட்டில் வாஸ்து குறை ஏதாவது இருக்குமா எனக்கு உதவ முடியுமா ஐயா.

அதே போல் எங்களது கிராமத்தில் இளம் வயதில் உள்ளவர்கள் நிறையபேர் நோய்வாய்ப்பட்டு இறந்து இருக்கிறார்கள் இதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா கூறுங்கள் ஐயா.

நண்பரே வணக்கம் இன்றைக்கு நீங்கள் கிராமம் என்பது சில வருடங்களுக்கு முன்பு ஒரு தனி நபரோ ஒரு குடும்பமோ அந்த இடத்தில் குடியேறி இருப்பார்கள் பின்பு காலப்போக்கில் அது கிராமமாக மாறியிருக்கும் அன்றைய நாளில் ஒருவர் எதுபோல வீடமைப்பு உருவாக்கினாரோ அதேபோல் இன்றைவரைக்கும் எல்லோரும் ஒரே மாதிரியான வீட்டியின் அமைப்பையே நீங்கள் அனைவரும் உருவாக்கிக் கொண்டே இருப்பீர்கள்

 

உங்களது வீட்டின் அமைப்பில் உள்ள தவறுகள் :

  1. வடகிழக்கில் சமையலறை,
  2. தெற்கு திசையை நோக்கிய தென் மேற்கு வாசல் உள்ள வீடு அமைப்பு,
  3. தென்கிழக்கில் கழிவறை மலக்குழிக்குள் அமைப்பு,
  4. வடகிழக்கில் பூஜை அறை,
  5. தென்மேற்கு அறையை மாஸ்டர் பெட்ரூம் ஆக பயன்படுத்தாமல் வேறு தேவைக்கேற்ப பயன்படுத்துவது,
  6. வடக்கும் கிழக்கும் முற்றிலும் மூடப்பட்ட வீடாக இருப்பது,
  7. தென்கிழக்கு தெற்கு நடுப்பகுதி இது போன்ற பகுதியில் கிணறு ஆறு ஓடை மலக்குழி தரைக்கு கீழ் தண்ணீர் தொட்டி போன்ற அமைப்புகள் வருவது,

உங்கள் ஊரின் அமைப்பு :

  1. உங்களுடைய ஊரில் தென்கிழக்கில் தெற்குப் பகுதியில் குளம் குட்டை ஆறு ஓடை போன்ற நீர்நிலைகள் இருக்க வாய்ப்பு அதிகம்.
  2. வடகிழக்கில் உயரமான மலைக்குன்றுகள் இருக்க வாய்ப்பு அதிகம்.
  3. ஊரில் உள்ள வீடுகள் அனைத்தும் மேற்கு திசையை நோக்கியும் மேற்கு திசை நோக்கியோ இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  4. உங்கள் ஊரிலுள்ள அனைத்து வீடுகளிலுமே கழிவறை மலக்குழிக்குள் சமையலறை பூஜையறை இது எல்லாருமே ஒரே மாதிரியாக எல்லோர் வீட்டிலும் இருக்க வாய்ப்பு உண்டு.

இதுபோல ஒரு ஊரில் இயற்கைக்கு மாறான அமைப்புகள் இருக்கும் பொழுது அந்த ஊரில் உள்ள தனிநபர் முதற்கொண்டு மொத்த ஊரில் உள்ள அனைவருக்குமே பாதிப்புகளை ஏற்படுத்தும்.