வீட்டில் தவிர்க்க வேண்டிய சில பொதுவான அமைப்புகள்
- மனையின் தெற்கு, தென்மேற்கு, மற்றும் மேற்கு ஆகிய பகுதிகளில் பள்ளங்கள் இருத்தல்.
- மனையின் வடக்கிலும், கிழக்கிலும் மேடுகள் இருத்தல்.
- மனையின் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள சாலைகள் மிக உயரமாயிருத்தல்.
- மனையின் தெற்கிலும், மேற்கிலும் உள்ள சாலைகள் மிகவும் தாழ்ந்திருத்தல்.
- சாலைகள் வடக்கிலிருந்து தெற்கிலும், கிழக்கிலிருந்து மேற்கிலும் அதிகச் சரிவு – அமைந்திருத்தல்.
- மனையின் நீச்சப்பகுதிகளில் தெருக்குத்தல்கள் இருத்தல்.
- மனை சதுரம் அல்லது செவ்வகமாக இல்லாமல் வேறு பல கோணங்களிலும், வடிவங்களிலும் இருத்தல்.
- மனையின் அகல நீளவிகிதம் 1:2 க்கு அதிகமாக இருத்தல்.
- இரண்டு பெரிய மனைகட்கு இடையே உள்ள சிறிய மனையை வாங்குதல்.
- மனையின் தென்மேற்கு மூலை, மூலைமட்டத்திற்கு இல்லாதிருத்தல்.
- மனையின் வடகிழக்கு பகுதியை தவிர மற்ற பகுதிகளில் வளர்ச்சி இருத்தல்.
- மனையின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு வெட்டுபட்ட அமைப்பு.