வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு வாஸ்து தவறு தான் காரணமா

வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு வாஸ்து தவறு தான் காரணமா?

 

கேள்வி : ஐயா, வணக்கம் எனது மகனுக்கு 34 வயது ஆகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. என்னுடைய கணவர் ஏசுளு வாங்கிவிட்டார். நாங்கள் எங்களுடைய ஜாதகம் பார்த்துதான் வீடு கட்டினோம். துலாம் ராசிக்கு தெற்கு வாசல் வைத்துள்ளோம். வாஸ்து பார்த்துதான் வீடு அமைத்தோம். ஆனாலும், பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. ஐயா எங்களுக்கு உதவமுடியுமா?

பதில் : ஒருவருடைய ஜாதகரீதியாக லக்னத்திற்கு நான்காம் இடத்தின் தொடர்பை பொருத்து ஒருவர் வாடகை வீட்டில் இருப்பாரா? கூரை வீட்டில் இருப்பாரா? ஓட்டு வீட்டில் இருப்பாரா? மாடி வீட்டில் இருப்பாரா? அல்லது இரண்டு மாடி வீட்டில் இருப்பாரா? என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், ஒருவர் இந்த திசையில் தான் இருக்க வேண்டும் அல்லது இந்த திசையில் தான் வீடு கட்ட வேண்டும் என்று கூறுவது தவறு.

 

உங்களது வீட்டின் தவறுகள் :

நீங்கள் துலாம் ராசி தெற்கு திசை வீடு என்று கூறியுள்ளீர்கள். அதனால் என்னுடைய கணிப்புப்படி உங்களுடைய வீட்டின் பின்வரும் தவறுகள் கண்டிப்பாக இருக்கும்.

1. தெற்கு வாசல் உச்சத்தில் இல்லாமல், நீச்சத்தில் அதாவது தென்மேற்கு சார்ந்து வந்துவிட்டாலே உங்களுடைய கணவர் ஏசுளு வாங்கிவிடுவார். அதனால் முக்கிய வாசலே தவறு.

2. தெற்கு பகுதியில் இடம் வேண்டும் என்பதற்காக அதிக காலியிடம் விட்டுவிட்டு, வடக்கு பகுதியில் மிக குறைந்த இடைவெளியில் வீடு அமைத்துக்கொள்வது அல்லது வடக்கு முழுவதும் மூடிய அமைப்பில் கூட வீடு அமைந்திருக்கலாம். இந்த அமைப்பு வருமானத்தை கொடுக்காது மாறாக கடனை உருவாக்கும்.

3. தெற்கு வாசல் வரும்போது சமையலறையை தென்கிழக்கிற்கு பதிலாக வடமேற்கில், வடகிழக்கில், தென்மேற்கில் என ஏதாவது வேறு ஒரு பகுதிக்கு தவறான இடத்தில் மாற்றி அமைத்துக்கொள்வது.

4. கிழக்கு முழுவதும் மூடிய அமைப்பில் வீடு அமைந்திருப்பது.

5. தெற்கு பகுதியில் போர்டிக்கோ அமைப்பை, கூரை மட்டத்திலிருந்து கீழே இறக்கி தாழ்வாக அமைத்துக் கொள்வது.

6. கார் பார்கிங் அமைப்பிற்காக தெற்கு பகுதியின் தரையை வீட்டை விட கீழே தாழ்வாக அமைத்திருப்பது.

7. கார் வீட்டிற்குள் நுழைவதற்கு முக்கிய கேட்-டை தென்மேற்கு, தெற்கு பகுதியில் அதாவது நீச்சத்தில் வரும்படி அமைத்திருப்பது.

8. போர், கிணறு, தரைக்குகீழ்; தண்ணீர் தொட்டி, கழிவுநீர் தொட்டி போன்றவைகளை வீட்டின் தென்கிழக்கு, தென்மேற்கு, தெற்கு பகுதியில் அமைத்திருப்பது.

9. மாடிபடி அமைப்பை தென்மேற்கில் மூடிய அமைப்பில் உருவாக்கி இருப்பது.

10. பூஜையறை வீட்டின் மொத்த அமைப்பில் வடகிழக்கில் அமைத்திருப்பது.

அன்பு நண்பரே! நான் இங்கு குறிப்பிட்ட அமைப்புகள் கண்டிப்பாக உங்களுடைய வீட்டில் இருக்கும். உங்களுடைய பிரச்சனைக்கு முதல் காரணமே உங்களுடைய வீட்டின் அமைப்பே ஆகும்.