வீட்டின் வடகிழக்கு மூலை மூடப்படுவதால் ஏற்படும் தீய பலன்கள்…
வடகிழக்கு பகுதி சமையலறையால் மூடப்பட்டு கிழக்கு உயர்ந்து மேற்குத் தாழ்ந்தால்,
1. உடல் நலம் கெடும். வம்சம் அழியும்.
2. முன்னேற்றமும் செல்வமும் அழியும். வறுமை சேரும்.
3. புகழ், பெருமை அழியும்.
4. பிரச்சனைகளும் துயரங்களும் பல்கிப் பெருகும். மனநிம்மதி குறையும்.
5. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படும்.
6. குடும்பத்தில் ஒருவர்க்கொருவர் ஓட்டுதலின்றிப் போய்விடும்.
7. தொழிலில் ஈடுபாடு போய்விடும்.
8. மேலதிகாரிகளால் இடையூறுகள் ஏற்பட்டு நிம்மதி குறையும். பதவி உயர்வு காலதாமதமாகும்.
9. நல்ல காரியங்களில் தொடர்ந்து தடை ஏற்படும்.
10. வீடு, கட்டிடம் விற்பனை அல்லது ஏலத்திற்கு வரும்.
வடகிழக்கு பகுதி மூடப்பட்டு, கிழக்குப் பகுதி உயர்ந்து, மேற்குப் பகுதி தாழ்ந்தால்,
- ஆண் குழந்தைகள் பெற்றோர்க்கு எதிரியாவார்கள். அதுமட்டுமின்றி அவர்களது கல்வியும் பாதிக்கப்படும்.
- குடும்பத்தில் பல வழிகளில் இருந்து பிரசனைகள் ஏற்படும்.
- ஆண்களுக்கு விபத்து ஏற்பட்டு அறுவைச் சிகிச்சையும் நடைபெறும்.
- தலை, கழுத்து தொடர்பான இடையூறுகள் வரும்.
இது போன்ற அமைப்புகள் வீட்டின் வடகிழக்கு மூலையில் வரும்போது அதன் அமைப்புகளை தவிர்க்கவும்.