வீட்டின் தென்கிழக்கு மூலையின் அமைப்புகள்
- வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கதவு, ஜன்னல்களை அமைப்பது சிறப்பு.
- வடகிழக்கு மூலையில் போர்டிகோ அமைப்பு வருவது மிகவும் நல்லது.
- வீட்டின் மாடிப்படிகள் தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு பகுதிகளில் அமைக்கலாம்.
- வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தாழ்வாரம், பால்கனி வருவது சிறப்பை தரும்.
- கட்டிடம் அமைக்கும் போது தென்மேற்கு பகுதி உயரமாகவும்,வடகிழக்கு தாழ்வாகவும் இருத்தல் வேண்டும்.
- கூரைகள் அமைக்கும் போது கூரையின் சரிவு வடக்கு மற்றும் கிழக்கு முகமாக அமைத்தல் வேண்டும்.
- இருபக்கச் சரிவாயின் வடக்கு, கிழக்குகளில் சரிவு அதிகமாக இருத்தல் வேண்டும்.
- தென்மேற்கு பகுதியின் வெளிக் கட்டிடங்களின் தளமானது அப்பகுதிகளில் உள்ள பிரதானக் கட்டிடத்தின் தளத்தை விடத் தாழ்வாக இருக்க கூடாது.
- மாட்டுத் தொழுவம் மனையின் வடமேற்கு மூலையில் வடக்கு மதிலைத் தொடாமல் அமைத்தல் வேண்டும்.
- வீட்டிற்கு வெளியே சமையலறை, குளியலறை, கழிப்பறை, பணியாளர் குடியிருப்பு போன்றவை அமைக்கும் போது தென்கிழக்கு அல்லது வடமேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு மதில்களைத் தொடாமல் அமைத்தல் வேண்டும்.
- மின் இணைப்பு, மோட்டர் அறை, மின் உற்பத்தி இயந்திர அறை ஆகியன தென்கிழக்கு மூலையில் வருவது சிறப்பு.
- அலமாரிகள், துணிப் பெட்டிகள், பீரோக்கள், பணப்பெட்டிகள், பாரமான சாமான்கள், சோபா, நாற்காலிகள், மின் சாதனங்கள் போன்ற அமைப்புக்கள் அனைத்தும் பொது விதிகட்கு ஒப்பவே இருத்தல் வேண்டும்.