வீட்டின் எந்தெந்த தவறுகள் என்னென்ன பிரச்சனைகளை கொடுக்கும் ?
ஒருவர் தன்னுடைய வேலையில் vrs வாங்குகிறார் என்றால் அவர் வீட்டின் தவறான அமைப்புகள் :
- தென்மேற்கு தெற்கு பகுதியில் முக்கிய வாசல் வருவது.
- தென்மேற்கில் உள்ள அறையை வரவேற்பறை ஆக பயன்படுத்துவது.
- தென்மேற்கில் மிகப்பெரிய போர்டிகோ அமைப்பை உருவாக்கிக் கொள்வது.
சிறுநீரகம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு காரணமான வீட்டின் அமைப்புகள் :
- தெற்கு நடுப்பகுதி தென்மேற்கு இந்த பகுதியில் வீட்டிற்கு உள்ளேயோ அல்லது வீட்டிற்கு வெளியில் கிணறு, ஆள்துளை கிணறு, தரைக்கு கீழ்தண்ணீர் தொட்டி, மலக்குழி போன்றவை வருவது.
- தென்மேற்கில் வீட்டின் உள்பகுதியில் தவறான படி அமைப்பு வருவது.
- வடமேற்கு பகுதியில் வீட்டின் உள்பகுதியில் தவறான படி அமைப்பு வருவது.
அடிக்கடி இடது காலில் மற்றும் இடது கையில் எலும்பு முறிவு ஏற்படுவதற்கு காரணமான வீட்டு அமைப்புகள்:
- வடமேற்கு பகுதியில் தவறான அமைப்புகளான வடமேற்கு வெட்டுப்பட்ட அமைப்பில் கட்டடங்கள் உருவாக்குவது.
- வடமேற்கு வடக்கு தவறான தெருக்கூத்து தெரு பார்வை வருவது.
- வடமேற்கு பகுதியில் கூரைஅமைப்பை கீழாக இறக்கி அமைத்துக் கொள்வது.
வலது கை மற்றும் வலது கால் பகுதிகளில் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுவதற்கு காரணமான தவறான அமைப்புகள் :
- தென்மேற்கு தெற்கு மற்றும் தென் மேற்கு பகுதியில் தெருக்கூத்து, தெருப்பார்வை வருவது.
- தென்மேற்கில் தவறான படி அமைப்பு வருவது.
- தென்மேற்கில் தவறான பூஜையறை அமைப்பு வருவது.
- தென்மேற்கில் கழிவறை அமைப்புகள் வருவது.
- தென்மேற்கில் தவறான முக்கிய வாசல் அமைப்புகள் வருவது.
- தென்மேற்கில் தவறான முக்கிய கட்டமைப்புகள் வருவது.
- தென்மேற்கில் தவறான முக்கிய கேட் அமைப்புகள் வருவது.
பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினையும் வரக்கூடாது அமைப்புகள் :
தென்கிழக்கில் நீர் நிலைகளான கிணறு, ஆள்துளை கிணறு, தரைக்கு கீழ் தண்ணீர் தொட்டி, கழிவறைகள் மற்றும் மழக்குழிகள் வருவது.