வீட்டின் அறைகளின் தளம் (FLOOR) தாழ்தலும் அதற்குரிய பலன்களும்
வீட்டின் தளத்திற்கு எந்த தளப்பொருள்களைப் பயன்படுத்தினாலும் அச்செயல்பாடு நமது அன்றாட வாழ்கையின் தர த்தையும், ஓரளவு நிலையான பொருளாதாரத்தையும் ஒட்டியதாகவே இருத்தல் வேண்டும். திடீர் வகளால் உயர் பொருள்கள் கொண்ட தளத்தை அமைப்பது நமக்குத் தீய பலன்களையே தரும்.
வீட்டின் தளம் சாலையை விடத்தாழக்கூடாது. தளம் அமைக்கும் போது தென்மேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கி சரிவாக இருத்தல் வேண்டும். மிகச்சிறிய வித்தியாசமாக இருந்தாலும் தென்மேற்கிலிருந்து தென்கிழக்கு, தென்கிழக்கிலிருந்து வடமேற்கு, வடமேற்கிலிருந்து வடகிழக்கு எனப் படிப்படியாகச் சற்றுத் தாழ்ந்திருத்தல் நலம்.
1. வடகிழக்கு
கட்டிடத்தின் எல்லாப் பகுதிகளையும் விட இப்பகுதி தாழ்ந்திருத்தல் நலம். கல்வி,செல்வம், முன்னேற்றம் பெருகும்.
2. கிழக்கு
வடகிழக்கு பகுதியை விடத் தாழ்வாக இருத்தல் கூடாது. தென்கிழக்கு பகுதியை விடச் சற்று தாழ்ந்திருத்தல் நலம்.முன்னேற்றமும், வெற்றியும், பேரும், புகழும் தரும்.
3. தென்கிழக்கு
கிழக்கு, வடக்கு, வடமேற்கு பகுதிகளை விடத் தாழக்கூடாது. தீய பலன்கள் தரும். செல்வம் குறையும். சண்டை சச்சரவுகள் பெருகும். திருட்டு, தீ விபத்து ஏற்படும்.
4. தெற்கு
வடக்கு, கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு பகுதிகளை விடத் தாழக்கூடாது. தீய பலன்கள் தரும். பெண்கள் உடல் நலம் பாதிக்கப்படும். பெண்களுக்கு இதய நோயும்,அகால மரணமும் தரும்.
5. தென்மேற்கு
கட்டிடத்தில் எல்லாப் பகுதிகளையும் விட இப்பகுதி உயரமாக இருத்தல் வேண்டும். இப்பகுதி தாழ்ந்தால் மிகத் தீய பலன்கள் தரும். முன்னேற்றம் தடைப்படும். வறுமை தரும். ஆண், பெண் இருபாலருக்கும் தீராத கொடிய வியாதிகளும், நீரழிவு நோயும், விபத்துக்களும், அகால மரணங்களும் தரும்.
6. மேற்கு
வடக்கு, கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு பகுதிகளை விடத் தாழக்கூடாது. தீய பலன்கள் தரும். முன்னேற்றம் தடைப்படும். பிரச்சனைகள் தரும். ஆண்கள் உடல் நலம் பாதிக்கப்படும். ஆண்களுக்கு இதய நோயும், அகால மரணமும் தரும்.
7. வடமேற்கு
வடகிழக்கு, வடக்குப் பகுதிகளை விடத் தாழக் கூடாது. தீயபலன்கள் தரும். தேவையற்ற செலவீனங்கள் ஏற்படும். வறுமை தரும். சண்டை , சச்சரவுகள், பகை பெருகும்.
8. வடக்கு
வடகிழக்கை விடத் தாழக்கூடாது. செல்வம் குறையும். வாயுவை விடச் சற்றுத் தாழ்ந்திருத்தல் நலம் பயக்கும்.
9. மையம்
தாழக் கூடாது. தீய பலன்களே தரும்.