வீட்டின் அமைப்புகள் எப்படி இருந்தால் சிறப்பை தரும்

வீட்டின் அமைப்புகள் எப்படி இருந்தால் சிறப்பை தரும்?

 

வீட்டின் உள் அமைப்புகள் மற்றும் பலன்கள் 

 

1. படுக்கை அறையில் உள்ள கட்டில் அமைப்புகள் கிழக்கு, மேற்காக இருப்பது சிறப்பு.

கட்டில் அமைப்புகளின் திசை மாறி இருக்கும் பட்சத்தில் கெட்ட கனவுகள் ஏற்பட்டு அன்றைய நாள் துரதிஷ்ட நாளாக மாறிவிடும்.

2. கழிவறை கோப்பைகள் எப்பொழுதுமே தெற்கு, வடக்காக வருவது சிறப்பு.

திசை மாறி கழிவறை கோப்பைகளை உபயோகிப்பதால் ஆரோக்கியம் கெடும்.

3. பூஜையறையில் சாமி படங்கள் வடக்கு, கிழக்கு முகமாக வருவது மட்டுமே சிறப்பு.

தெற்கு மற்றும் மேற்கு முகமாக அமர்ந்து பிரார்த்தனை செய்யும்போது பலன் கிடைப்பதில்லை என்று நம்பப்படுகிறது.

 

4. சாப்பாட்டு அறையில் உணவருந்தும் டைனிங் டேபிள் எக்காரணம் கொண்டும் வடக்கு முகமாக அமரும்படி அமைக்கக்கூடாது.

வடக்கு முகமாக அமர்ந்து உணவருந்தினால் ஆரோக்கியம் கெடும்.

5. சமையலறையில் சமைக்கும் திசை எப்பொழுதுமே கிழக்கு முகமாக மட்டுமே இருக்க வேண்டும்.

கிழக்கு திசையில் நின்று சமையல் செய்யும்போது மட்டுமே சுகாதாரமான முறையில் சமையல் செய்ய முடியும்.

6. குழந்தைகள் படிக்கும் அறை அல்லது படிக்கும் திசை வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருப்பது சிறப்பு.

வடக்கு மற்றும் கிழக்கு முகமாக அமர்ந்து படிக்கும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குகிறார்கள்.

7. வரவேற்பறையில் சோபா மற்றும் டேபிளை வடக்கு மற்றும் கிழக்கு முகமாக அமைப்பது சிறப்பு.

மேற்கு மற்றும் தெற்கு முகமாக நாம் நின்று விருந்தினரை வரவேற்பது அவர்களை அவமதிப்பதற்கு சமம்.

8. குளிக்கும் அறையில் குளிக்கும் திசை வடக்கு முகமாகவோ, கிழக்கு முகமாகவோ இருப்பது சிறப்பு.

 

தெற்கு திசையிலும், மேற்கு திசையிலும் நின்று குளிக்கும்போது ஆரோக்கியம் குறைவதாகவும், ஆயுள் குறைவதாகவும் நம்பப்படுகிறது.

மேற்கூறிய இந்த விஷயங்கள் அனைத்தும் காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது.

82205-44911