வாஸ்து சாஸ்திரப்படி வடக்குப்பகுதி

வாஸ்து சாஸ்திரப்படி வடக்குப்பகுதி

வடக்குப் பகுதி

 

வடக்குப் பகுதி என்பது குபேரனின் திசை என்பார்கள். அந்த திசை எப்பொழுதுமே திறந்தே இருக்க வேண்டும். வீட்டிற்கு மொத்தப் பகுதிக்குமே பள்ளமாக இருப்பது சிறப்பு , இந்தப்பகுதியில் நீர்த்தொட்டிகள், சம்பு , கிணறு, போர், மெயின் கேட், மெயின் டோர் வரவேண்டும். இடத்தைப் பொருத்து சதுரமாகவும், செவ்வகமாகவும் இருக்க வேண்டும்.

 

இடைவெளி அமைப்பு

 

வீட்டிற்கும், காம்பவுண்டிற்கும் குறைந்தது 5 அடி இடைவெளியாவது இருக்க வேண்டும். அதாவது குறைந்தது 5 அடி என்றால் அதிகப்படியாக 20,30 அடிகள் கூட இடைவெளி இருக்கலாம். வடக்கு சுவர் யாருடைய சுவரிலும் ஒட்டாமல் தனி காம்பவுண்டாக இருப்பது நல்லது.

 

கவனத்தில் கொள்ள வேண்டியது

 

நம்முடைய காம்பவுண்ட் சுவரில் நாமும் சரி, பக்கத்து வீட்டுக்காரர்களும் சரி தாழ்வாரம் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தக்கூடாது. காம்பவுண்டுக்கும், வீட்டுக்கும் உள்ள இடைவெளியில் மரம், செடி, கொடி வைக்கும்போது அது தரையிலிருந்து 3 அடிக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிலபேர் போர்டிக்கோ அமைப்புகளை உருவாக்கி அதில் கார்பார்க்கிங் வைத்திருப்பார்கள். அது தவறான அமைப்பாகும். கார் பார்க்கிங் எங்கு வைக்க வேண்டும் என்கிற விதிமுறை உண்டு.

 

வடக்கை கையாளும் முறை

 

வடக்குப் பகுதியைச் சரியாகக் கையாண்டால் ஆண்களுக்கு வருமானம் என்பது தடைபடாமல் அதிகமாகிக் கொண்டே போகும்.

எனது அனுபவத்தில் ஆண்களுக்கு வருமானம் குறைவாக உள்ள வீடு பலவற்றைப் பார்த்திருக்கிறேன். அவர்களின் வீடுகள் அனைத்துமே வடக்கு அடைபட்டு, ஜன்னல்கள்கூட இல்லாத வீடாக இருப்பதை நான் கவனித்திருக்கிறேன்.

உத்தியோகம்தான் புருஷ லட்சணம் என்போம். வடக்கு அடைபட்ட வீட்டில் உள்ள ஆண்களை விட பெண்களின் வருமானம் அதிகமாக இருப்பதையும் நான் கவனித்திருக்கிறேன். எனவே அன்பு நண்பர்களே, நீங்கள் குடியிருக்கும் வீட்டில் வடக்குப் பகுதியில் ஜன்னல் போன்ற அமைப்பு இருந்தால் 24 மணிநேரமும், வருடம் முழுவதும் திறந்தே இருப்பது சிறப்பைத் தரும்.

இங்கு நான் குறிப்பிடுவது வருமானம் மட்டுமல்ல, ஆரோக்கியம், பெயர், புகழ், செல்வம், அனைத்திற்கும் நம் வீட்டின் வடக்கு திசையுடன் நெருங்கிய தொடர்புடையது.