வாஸ்து சாஸ்திரப்படி தெற்குப் பகுதி

 

வாஸ்து சாஸ்திரப்படி தெற்குப் பகுதி

தெற்குப் பகுதி

 

நாம் குடியிருக்கும் வீட்டிற்கு தெற்குப் பகுதி காம்பவுண்ட் மிக மிக அவசியம். இந்தக் காம்பவுண்டில் பக்கத்து வீட்டுக்காரருடன் கூட்டு வைத்துக் கட்டிக் கொள்ளலாம். இந்தப் பகுதியில் காம்பவுண்டுக்கும், வீட்டுக்கும் உள்ள இடைவெளி என்பது மிக மிக குறைவானதாக இருப்பது மிகச் சிறப்பைத் தரும். உதாரணத்திற்கு வடக்குப் பகுதியில் 10 அடி இடைவெளி என்றால், தெற்குப்பகுதியில் 2 லிருந்து 3 அடி இடைவெளி விட்டால் போதும்.

 

தெற்குப் பகுதி காம்பவுண்ட் சுவர்

 

தெற்குப் பகுதி காம்பவுண்ட் இடைவெளியில் தரைதளம் மொத்த இடத்திற்கும் மேடானதாக இருப்பது சரி. இந்தப்பகுதியில் வரக்கூடாதவைகள், கழிவறை, கழிவுநீர்த்தொட்டி, உள் மூலைப்படி அமைப்புகள், கார் பார்க்கிங், தாழ்வாரங்கள் இது போன்று இன்னும் பல உள்ளன.

தெற்கு காம்பவுண்ட் பகுதியில் உயரமான மரங்கள் வளர்க்கலாம். தெற்குப்பகுதியில் உயரமான கட்டிடங்கள் இருக்கலாம். மலைகள் இருக்கலாம். குன்றுகள் இருக்கலாம்.

 

எனவே அன்பு நண்பர்களே , தெற்குப் பகுதியை எமன் திசை என்பார்கள். தெற்குப் பகுதியை சரியாகக் கையாண்டால் விபத்து, திருட்டு, குடும்பப் பிரச்சினை , கொடுக்கல் வாங்கல் இவைகளின் பாதிப்பிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

 

நான் இங்கு குறிப்பிட்டது ஒரு சில உதாரணங்களே , நான் நேரில் பார்க்கும்போது மட்டுமே எது சரி, எது தவறு என்று கூற முடியும்.