வாஸ்துவும் – உணவக (Hotel) அமைப்பும்

வாஸ்துவும் – உணவக (Hotel) அமைப்பும்

 

மின்னஞ்சல்(E.mail) வாயிலாக நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று உணவகங்களுக்கும், வாஸ்துவுக்கும் சம்பந்தம் உண்டா என்று அறிவோம்.

 

உணவகமும்  வாஸ்துவும்

வாஸ்து சாஸ்திரத்துக்கும் ஹோட்டல் தொழிலுக்கும் தொடர்பு உண்டு. அந்த வகையில் நமது தமிழ் நாட்டிலும் சரி வெளி மாநிலத்திலும் சரி ஒரு சில கடைகள் மிக பிரபலமாக உள்ளதற்கும் வாஸ்து சாஸ்திரத்திற்கும் தொடர்புண்டு.

 

அந்த ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு அமைப்பும், அந்த ஹோட்டல் அமைந்த இடத்தின் அமைப்பிலும், தென் கிழக்கு , வடமேற்கு , ஆகிய பகுதிகளில் தெருக்குத்து, தெருப்பார்வை போன்ற ஒரு சில நல்ல அமைப்புகளால் மட்டுமே அந்த ஹோட்டல் மிக அதிகமாக பிரபலமடைகிறது. மேலும் தென்கிழக்கு பகுதியில் கழிவு நீர் தொட்டி, ஆழ்துளை கிணறு, தண்ணீர் தொட்டி போன்றவை இருக்கக் கூடாது.

 

வாஸ்துவும் வருமானமும்

ஒரு சில பேர் தன்னுடைய குடியிருப்பு பகுதியில் ஒரு பகுதியை ஹோட்டல் தொழிலுக்காக மாற்றியும், இன்னும் சில பேர் தன்னுடைய வீட்டிலேயே ஒரு பகுதியை ஹோட்டல் தொழிலுக்காக மாற்றியும் உள்ளதை நாம் பல இடங்களில் பார்க்க முடியும். இது போல் உள்ள ஹோட்டல் தொழிலில் அங்குள்ளவர்களுக்கு மட்டுமே போதுமான வருமானத்தை தரக்கூடியதாக அமையுமே தவிர, பெரிய அளவில் அவர்கள் வெற்றி என்பதை பெற வாய்ப்பு இல்லை .

நான் இங்கு குறிப்பிடுவது அனைத்துமே எல்லோருக்கும் பொதுவான ஒன்று . வாஸ்து என்பது இடத்திற்கு இடம், ஆட்களுக்கு ஆட்கள் , சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். ஒரே மாதிரியாக எல்லோருக்கும் பலன் தராது. அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரின் ஆலோசனைக்கு பிறகு எந்த ஒரு முடிவும் எடுப்பது சிறப்பு .