வாஸ்துப்படி வீடு கட்டும்போது தடைகள் ஏற்படுவதற்கான காரணம்

 நாம் கட்டக்கூடிய வீடு பல வருடங்களாக தடைப்பட காரணம் என்ன? என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
 

 நீங்கள் கட்டக்கூடிய வீட்டிற்கு முதலில் மிக தெளிவான திட்டம் வேண்டும். அதேபோல் புமி புஜை போடக்கூடிய நாள் மிக சிறந்த நன்நாளாக இருக்க வேண்டும். 

 நாம் கட்டக்கூடிய வீட்டில் அஸ்த்திவாரம் வரை சுவர் வந்தவுடன் நான்குபுறமும் காம்பவுண்ட் சுவருக்கு உண்டான அஸ்த்திவாரத்தை கட்டி முடிக்க வேண்டும். பிறகு வீட்டின் அஸ்த்திவாரத்திற்கும் காம்பவுண்ட் அஸ்த்திவாரத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் மண்ணைக் கொண்டு நிரப்பி கொள்ள வேண்டும். இதுபோல் நீங்கள் செய்யும்போது நான்கு புறமும் மேடு பள்ளம் என்கிற விஷயம் கட்டுப்பட்டு ஒரே சமமான இடமாக மாறிவிடும்.

 காம்பவுண்ட் சுவரை கட்டாமல்இ நாம் கட்டக்கூடிய வீட்டிற்கு தெற்கு, மேற்கு பகுதி பள்ளம் போன்ற அமைப்புகள் இருக்கும்போது கட்டிட வேலை மட்டுமல்லாது, பணத்தட்டுப்பாடும் வேலை முடிய வருட கணக்குகள் ஆக வாய்ப்புண்டு.

வாஸ்து சாஸ்திரப்படி – கார் பார்க்கிங் :

 நம்முடைய வீட்டில் கார் பார்க்கிங் எங்கு ஒதுக்க வேண்டும் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.

 நமது வாழ்வில் மிக முக்கியமான பங்கினை வகிப்பது நம்முடைய வாகனங்களே. அந்த வகையில் நாம் பயன்படுத்தக்கூடிய வாகனத்தை நிறுத்தி வைப்பதற்கு ஒரு பாதுகாப்பான இடம் வேண்டும். அதை எங்கு எப்படி உருவாக்க வேண்டும் என்பது பல பேரின் கேள்விக்குறியாக உள்ளது. 

 நமது தமிழ்நாட்டில் பல மெட்ரோ சிட்டிகளில் உருவாக்கக்கூடிய மாடி குடியிருப்புகளுக்கு அடியில் இன்று கார்பார்க்கிங் அமைத்துக் கொள்கிறார்கள். அதுவும் ஒருவகையில் சிறப்பு ஆகும். 

 தனிப்பட்ட நபர் கட்டக்கூடிய வீட்டிற்கு கார்பார்க்கிங்கிற்கு போர்டிக்கோவை பயன்படுத்துகிறார்கள். அது மிகவும் தவறு. போர்டிக்கோ அடியில் காரை நிறுத்துவது தவறு. அதனால் அந்த வீட்டில் வட கிழக்கு பகுதி கனமான பகுதியாகவே இருக்கும்.

 நம்முடைய வீட்டிற்கு வடமேற்கு பகுதியில் மட்டுமே கார்பார்க்கிங் வர வேண்டும். அதுவும் வீட்டின் மேற்கு சுவரின் ஒழுங்கிற்குள் மட்டுமே வரவேண்டும். காம்பவுண்ட் சுவரையும், வீட்டு சுவரையும் சேர்க்காமல் செட் அமைத்து கொள்வது மிக மிக சிறப்பு. 

 நமது வீட்டிற்கு வடமேற்கு பகுதியில் இடைவெளி இல்லாமல் தென்கிழக்கு பகுதியில் தான் கார்பார்க்கிங் அமைக்க முடியும் என்றால் தாராளமாக அமைத்துக் கொள்ளலாம். 

 வடமேற்கு பகுதியை போலவும் இந்த பகுதியில் கார்பார்க்கிங் அமைக்கும்போது எந்த ஒரு காம்பவுண்ட் சுவரையும் சேர்க்க கூடாது. வீட்டின் சுவரையும் சேர்க்காமல் அமைப்பது சிறப்பு. 

 எக்காரணம் கொண்டு வடகிழக்கு பகுதியிலும்,  தென்மேற்கு பகுதியிலும் கார்பார்க்கிங் அமைப்பதை தவிர்ப்பது நன்மையை தரும். அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரின் உதவியால் கார்பார்க்கிங் அமைப்பது சாலச்சிறந்தது.

வாஸ்து நிபுணர் 
P.M.கிருஷ்ண ராஜன்
8220544911