வாஸ்துப்படி தலைவாசல் அமைக்கும் திசைகள் மற்றும் அதற்குரிய பலன்கள்…
வாஸ்து சாஸ்திரம் :
தலைவாசல் நான்கு திசையில் எங்கு வைத்தால் நன்மை, எங்கு வைப்பது தீமை பற்றி அறிவோம்.
வடக்கு வாசல் :
நம்முடைய வீட்டிற்கு வடக்கு வாசல் என்பது வடக்கு பகுதியில் கிழக்கு சார்ந்து வருவதே சிறப்பு. நடுபகுதியிலோ அல்லது மேற்கு சார்ந்து வருவது தவறு. கிழக்கு சார்ந்து வரும்போது பலபல எண்ணிலடங்கா நன்மைகள் ஏற்படும். அந்த வீடு நல்ல சுபிக்ஷமான நிலையிலேயே இருக்கும். நடுபகுதியையோ அல்லது மேற்கு சார்ந்தோ வாசல்படி வரும் பட்சத்தில் அதனுடைய கெட்டபலன்கள் அதே வீட்டில் வசிக்கும் ஆண்கள் மீதே இருக்கும்.
1. நிலையான வருமானம் இருக்காது.
2. குடும்ப சொந்தங்கள் விட்டு விலகும் நிலை ஏற்படும்.
3. தந்தை மகன்/மகள் உறவுகளில் பாதிப்பு ஏற்படும்.
4. மனநிலையில் பாதிப்புகள் ஏற்படும்.
கிழக்குவாசல் :
நம்முடைய வீட்டிற்கு கிழக்கு வாசல் என்பது கிழக்கு பகுதியில் வடக்கு சார்ந்து வருவதே சிறப்பு. இதனால் பலபல நன்மைகள் இயற்கையிலேயே அந்த வீட்டிற்கு ஏற்படும். தவறான வாசல் அமைப்புகளை நடுப்பகுதியில் வருவதும், தெற்கு சார்ந்து வருவதும் இரண்டுமே தவறு. இதனால் அந்த வீட்டில் உள்ள பெண்கள் மீதே கெடுதலான பலன்கள் ஏற்படும்.
1. ஆரோக்கிய குறைவு அதாவது நோய் வாய்ப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
2. கண்பார்வை பாதிப்பு ஏற்படும்.
3. ஆண்களின் ஆதிக்கம் பாதிக்கப்படும்.
4. மனநிலை பாதிப்பை கூட உருவாக்கக் கூடியது.
தெற்கு வாசல் :
நம்முடைய வீட்டிற்கு தெற்குவாசல் என்பது கிழக்கு சார்ந்து மட்டுமே வரவேண்டும். தெற்கு வாசல் வைக்கும்போது அதே நேர் வடக்கு பகுதியிலும் வாசல் வைப்பதே மிக மிக சிறப்பைத் தரும். வடக்கு வாசல் உள்ள வீட்டில் எவ்வளவு நல்ல விஷயங்கள் நடக்குமோ அதேபோல பலன் தரவல்லது. இந்த இரண்டு வாசல் அமைப்பு தெற்குவாசல் நடுபகுதியிலோ, மேற்கு சார்ந்தோ வருவது மிகப்பெரிய தவறு. இதனால் பல பல கெடுதலான பலன்கள் அந்த வீட்டு ஆண், பெண் இருபாலருக்குமே இருக்கும்.
1. கணவன் மனைவி பிரிந்து வாழ நேரிடும்.
2. திருமணம் தாமதப்படும்.
3. குழந்தை பிறப்பு தள்ளி போகுதல்.
4. விவாகரத்து கோர்ட்டு கேஸ்.
5. கடன் சுமை.
6. வீடு ஏலம் போகுதல் போன்றவைகளும், உடல் ரீதியான பாதிப்புகள் போன்ற பிரச்சனைகளும் கூட வர வாய்ப்புண்டு.
மேற்கு வாசல் :
நம்முடைய வீட்டிற்கு மேற்கு வாசல் என்பது வடக்கு சார்ந்து வருவதே சிறப்பை தரும். நடுபகுதி தெற்கு சார்ந்து வருவது மிக தவறு. இங்கு மேற்கு வாசல் வரும்போது கிழக்கு வாசல் வர வேண்டும். கிழக்கு வாசல் வைக்கும்போது என்னென்ன நன்மைகள் கிடைக்குமோ அதே போல் இரண்டு வாசல் வரும்போது கிடைக்கும். தவறான வாசல் அமைப்பு என்றால் அதனுடைய கெட்ட பலன்கள் வீட்டில் உள்ள ஆண் பெண் இருவர் மீதும் இருக்கும்.
1. கலப்பு திருமணம் அல்லது காதல் திருமணம்.
2. சன்னியாசி வாழ்க்கை.
3. வியாபார நஷ்டம்.
4. அடிக்கடி விபத்து ஏற்படுதல்.
5. தற்கொலை முயற்சி.
ஒவ்வொரு வீட்டிற்கும் தலைவாசல் என்பது ரோடு அமைப்புக்கும், திசைக்காட்டிக்கும் ஏற்ப மாறுபடும். சரியான வாஸ்து நிபுணரின் ஆலோசனைக்கு பிறகுதான் நன்மைகள் தீமைகள் பற்றி தீர்மானிக்க முடியும். வாஸ்து சாஸ்திரத்திலேயே தலைவாசல் தான் உயிர் ஆகும்.