வாஸ்துபடி வீட்டில் வளர்க்ககூடிய மற்றும் வளர்க்கக்கூடாத மரம், செடி, கொடிகள்
வளர்க்கக்கூடிய மரம், செடி, கொடிகள் :
மரங்கள் :
தென்னை , வாழை, மா, பலா, புன்னை , கமுகு, வேம்பு, எலுமிச்சை நாரத்தன், மாதுளை, பவளமல்லி, சந்தனம், வசம்பு.
செடிகள் :
திருத்துழாய் (துளசி), பன்னீர், மற்றும் வழிபாட்டிற்குரிய மணமுள்ள மலர்கள் தரும் செடிகள்.
கொடிகள்:
மல்லி, முல்லை, திராட்சை, மற்றும் வழிபாட்டிற்குரிய மணமுள்ள மலர்கள் தரும் கொடிகள்.
வளர்க்கக் கூடாத மரம், செடி, கொடிகள் :
இம்மரங்களும் செடிகளும் வீட்டைச் சுற்றி வைத்தலாகாது. நல்ல பலன்கள் தராது.வறுமைதரும். புகழ் அழியும். உடல் நலனும் கெடும்.
கூடா மரங்கள் :
அத்தி, அரசு, ஆல், புளியன், புரசு, பீலி, நெல்லி, நொச்சி, நாவல், முருங்கை, இலந்தை , இலவன், இலுப்பை , விளான், வில்வம், பனை, பாக்கு, பேரிச்சை, வாகை, மாருதம், எட்டி, முந்திரி, மற்றும் முள் மரங்கள்.
கூடாச் செடிகள் :
அரளி, அகத்தி, ஆமணக்கு, ஊமத்தை , பருத்தி, எருக்கு கூளான், மற்றும் முள் உள்ள செடிகள்.
கூடாக் கொடிகள்:
மிளகு மற்றும் முள் உள்ள கொடிகள்.
மரங்கள் நட ஏற்ற நேரம் :
மரங்கள் மற்றும் செடிகள் நட, வளர்பிறையில் பிரதோசம் எனும் திரயோதசி நாள் (13-ம் நாள்) மிகவும் நல்லது. அன்று சூரியன் மறைய 1 1/2 மணி நேரத்திற்கு முன்பிருந்து, சூரியன் மறைந்த 1 1/2மணி நேரம் வரையான 3 மணி நேரம் மிகவும் உகந்த நேரமாகும்.