வாஸ்துபடி குடிநீர் இணைப்பு குழாய் எங்கு வரவேண்டும்?
நமது மொத்த இடத்தில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் தரைக்கு கீழ் தண்ணீர் தொட்டி அமைத்துக்கொள்வோம். இது இயற்கையிலேயே நடக்கக் கூடிய ஒன்று.
நமது இடத்தில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் பிரதான தண்ணீர் குழாய் இருக்கும்போது அதிலிருந்து எடுக்கக்கூடிய இணைப்பை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் நேரடியாக அருகில் உள்ள தண்ணீர் தொட்டியுடன் இணைத்துக் கொள்வது சிறப்பு.
நமது வீட்டின் தெற்குப் பகுதியில் பிரதான தண்ணீர் குழாய் இருக்கும் பட்சத்தில் அதில் இருந்து எடுக்கக்கூடிய இணைப்பை வடக்கு முகமாக எடுத்துச் சென்று அருகில் உள்ள தண்ணீர் தொட்டியுடன் மட்டுமே இணைக்க வேண்டும்.
நமது இடத்தில் மேற்கு பகுதியில் பிரதான தண்ணீர் குழாய் இருக்கும் பட்சத்தில் அதில் இருந்து எடுக்கக்கூடிய இணைப்பை கிழக்கு முகமாக எடுத்துச் சென்று தரைக்கு கீழ் உள்ள தண்ணீர் தொட்டியுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.
மேற்கு பகுதியிலிருந்து எடுக்கக்கூட இணைப்பை அதே இடத்தில் தண்ணீர் பிடிக்கும் படி உருவாக்குவது தவறு.
தெற்குப் பகுதியிலிருந்து எடுக்கக்கூடிய இணைப்பை தென்கிழக்கு பகுதியில் தண்ணீர் பிடிக்க கூடிய இடத்தில் உருவாக்குவதும் தவறு.
காரணங்கள் தெற்குப் பகுதியிலும் மேற்கு பகுதியிலும் தண்ணீர் பிடிக்க கூடிய அமைப்பை உருவாக்கும் போது அந்த இடத்தில் சிறு பள்ளம் போன்ற அமைப்பு ஏற்பட்டு சிரமங்களை உருவாக்கும். நோய்களை உருவாக்கும். கஷ்டங்களை உருவாக்கும். பல பிரச்சினைகளை உருவாக்கும். தேவையற்ற மனசங்கடங்கள் உருவாகும்.
எனவே இதுபோன்ற தவறான அமைப்புகள் இருந்தால் தவிர்க்கவும்.82205-44911