வருமானம் இல்லாமல் போவதற்கு வீட்டு அமைப்புகள் காரணமா

வருமானம் இல்லாமல் போவதற்கு வீட்டு அமைப்புகள் காரணமா?

 

அன்பு நண்பர்களே உங்களது வீட்டமைப்பில் நிறைய தவறுகள் இருக்க வாய்ப்புண்டு. அதில்,

1. வடக்கு முழுவதும் மூடிய அமைப்பாக இருக்கலாம்.

2. வடகிழக்கு முழுவதும் மூடிய அமைப்பாக இருக்கலாம்.

3. வடக்கு பகுதியில் உள்ள ஜன்னலை திறந்தால் வானம் தெரியாத அமைப்பில்         போர்டிகோ போட்டிருக்கலாம்.

4. வடக்கு மிக மிக குறைவான இடைவெளி விட்டிருக்கலாம்.

5. வடக்கு பகுதியில் காம்பவுண்ட் இல்லாமல் இருக்கலாம்.

6. வடக்கு பகுதியில் மழைநீர் உள்ளே வருகிறது என்பதற்காக தகரத்தில் பந்தல் போட்டிருக்கலாம்.

7. வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜன்னலை திறக்காமல் இருக்கலாம்.

8. முக்கிய வாசலை வடக்கு பகுதியில் புதன் வாசல் என்கிற வடமேற்கு வடக்கு பகுதியில் வைத்திருப்பது.

10. வடகிழக்கு வெட்டுப்பட்ட அமைப்பு (கட்டான அமைப்பு).

13. வடக்கு பொது சுவராக வருவது.

14. வடகிழக்கு சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக அங்கு பூஜை அறையை வைத்து அந்த இடத்தை நிரந்தரமாக மூடி விடுவது.

15. வடக்கு மற்றும் கிழக்கு பகுதி முழுவதும் உயரமான மரங்கள் வளர்ப்பது. நம்முடைய மரத்தை தவிர பொது மரங்களாக கூட இருக்கலாம்.

16. வடகிழக்கு பகுதியில் சூரிய வெளிச்சம் வரமுடியாத அளவிற்கு வடக்கு பகுதியிலும் கிழக்கு பகுதியில் உயரமான அல்லது மூடிய அமைப்பில் கட்டிடம் வருவது.

17. வாசல், ஜன்னல்கள் உச்சமான பகுதியில் இல்லாமல் இருப்பது.

18. மிக முக்கியமான அமைப்பான தென்மேற்கு மாஸ்டர் பெட்ரூமை, மாஸ்டர் பெட்ரூமாக பயன்படுத்த தவறினாலும் பணப் பிரச்சனைகள் வரும்.

19. தெற்கு பார்த்த வீடாக இருக்கும் போது வடக்கு மிக குறைவான இடைவெளியில் அல்லது இடமே விடாமலும் கூட வீடு அமைத்துக் கொள்வது.

21. வடகிழக்கில் மாடிக்கு ஏறும்படியான படி அமைப்பை அமைத்துக் கொள்வது.

22. வடகிழக்கில் உள்பகுதியில்  (தாழ்வான மேல்தளம்) அமைத்துக் கொள்வது.

நண்பர்களே வருமானம் இல்லை என்பதற்கு நான் இங்கு குறிப்பிட்ட அமைப்பு உறுதியாக உங்களது வீட்டில் உண்டு.
8220544911