ரிஷப லக்கனத்தில் பிறந்தவர்கள் பொதுவாக என்ன தொழில் செய்யலாம்?
முயற்சி இருந்தால் எந்த ஒரு தொழிலும் சாதனையை படைக்கலாம். 'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்' என்கிறது ஆன்றோர் மொழி. எனினும், 'எனது சொந்த ராசிப்படி நான் என்ன தொழில் செய்யலாம்? அல்லது செய்தால் ஓரளவு வெற்றி பெற முடியும்? என்று கேட்பவர்களுக்காக நான் ராசி அடிப்படையில் சில தொழில் ஆலோசனைகளை அளித்து உள்ளேன். உங்கள் சொந்த ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான பத்தாம் இடம் நன்றாக வலுப்பெற்று இருக்கும் பட்சத்தில் தாராளமாக கீழ்கண்ட தொழில்களை நீங்கள் செய்யலாம். அந்த விவரங்கள் வருமாறு…
ரிஷப லக்கினத்துக்கு ராஜயோகத்தை அளிக்கும் கிரகம் சனி ஒருவர் மட்டும்தான். இவர், உங்கள் ஜாதகத்தில் பலம் பெற்றிருப்பின் ராஜயோகப் பலன்களைத் தனது தசை நடைபெறும் 19 வருஷ காலத்தில் வாரி வழங்குவார்.
சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
நீங்கள்,
தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகங்கள் சம்மந்தமான தொழில்களை செய்யலாம்.
இது தவிர ஆடைகள் (விற்பது, தைப்பது போன்றவை), மணல் லோடு எடுப்பது, கண்ணாடி சம்மந்தமான தொழில்கள், கோயில் வாசலில் பூ, பழம் போன்ற கடைகள் வைத்தல், பூ வியாபாரம், வாசனை வியாபாரம், பலகார கடை,கட்டில் – மெத்தை வியாபாரம், கால் நடை பண்ணை, கலைஞர்கள், பின்னணி பாடகர்கள் அல்லது கேளிக்கையின் மூலம் சம்பாதித்தல் என இவற்றில் ஏதாவது ஒரு தொழிலை இவர்கள் செய்வது உத்தமம்.