மூல நட்சத்திர குணாதிசியங்கள்

                                                              மூல நட்சத்திர குணாதிசியங்கள் !!

மூலம் :

 மூல நட்சத்திரத்தின் இராசி : தனுசு

 மூல நட்சத்திரத்தின் அதிபதி : கேது

 மூல நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு

 

பொதுவான குணங்கள் :

  1. மனதிற்கு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவார்கள்.
  2. நேர்மையானவர்கள்.
  3. புகழப்படும் காரியங்களை செய்வதில் ஆர்வம்  உடையவர்கள்.
  4. பிரயாணம் செய்வதிலும் அதிக விருப்பம் உடையவர்கள்.
  5. சேமிப்பை மேற்கொள்வதில் சிறந்தவர்கள்.
  6. நித்திரையில் விருப்பம் உடையவர்கள்.
  7. தாய், தந்தையாருக்கு விருப்பம் உடையவர்கள்.
  8. தவநெறி கொண்டவர்கள்.
  9. சிறுதீனி உண்பவர்கள்.
  10. உறவினர்களுடன் சேராதவர்கள்.
  11. சுறுசுறுப்பாகச் செயல்படுவார்கள்.
  12. கல்வியில் ஆர்வம் நிறைந்திருக்கும்.
  13. லட்சணம் பொருந்தியவர்கள்.

 

மூலம் முதல் பாதம் :

இவர்களிடம் மூல நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. கிழங்குவகைப் பொருட்களில் நாட்டம்  உள்ளவர்கள்.
  2. உடல் பலவீனம் உடையவர்கள்.
  3. சுதந்திரமானவர்கள்.
  4. நினைத்ததை செய்து முடிக்க விரும்புபவர்கள்.
  5. அன்புள்ளவர்கள்.
  6. சொன்னதை செய்யக்கூடியவர்கள்.
  7. அதிகமாக கோபப்படுபவர்கள்.
  8. உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள்.

 

மூலம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் மூல நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. கௌரவத்தை விரும்புபவர்கள்.
  2. வீடு – வாகனம்  வாங்கும் யோகம் உள்ளவர்கள்.
  3. குடும்பத்தின் மீது பற்று உள்ளவர்கள்.
  4. எண்ணியதை செய்பவர்கள்.
  5. செய்ய முடிந்ததை மட்டுமே சொல்பவர்கள்.
  6. ஓவியம், இசையில் விருப்பம் உடையவர்கள்.
  7. பொய் பேசக்கூடியவர்கள்.
  8. நல்ல சிந்தனை உள்ளவர்கள்.

 

மூலம் மூன்றாம் பாதம் :

இவர்களிடம் மூல நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. மாயா ஜால கலைகளில் விருப்பம் கொண்டவர்கள்.
  2. புதிய கலைகளைக் கற்றுக் கொள்பவர்கள்.
  3. கலாதி உருவம் உடையவர்கள்.
  4. புதுமையை விரும்பக்கூடியவர்கள்.
  5. தியாக உணர்வு உள்ளவர்கள்.
  6. எழுத்துத்திறமை உள்ளவர்கள்.
  7. நல்ல பழக்கங்களில் விருப் பம் உள்ளவர்கள்.

 

மூலம் நான்காம் பாதம் :

இவர்களிடம் மூல நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. நல்ல பலசாலிகள்.
  2. காரியத்தில் கண்ணும் கருத்தும் உடையவர்கள்.
  3. நிதானமானவர்கள்.
  4. அனைவரையும் விரும்பக்கூடியவர்கள்.
  5. நல்ல நண்பராகத் திகழும் இவர்கள்
  6. நேர்மையான எதிரியாகவும் திகழ்வார்கள்.
  7. பிடிவாத குணம் உடையவர்கள்.
  8. வாதத்திறமை குணம் கொண்டவர்கள்.
  9. பகைவரை வெல்லக்கூடியவர்கள்.