முதல் தரமான மனையின் சிறப்புகள்

முதல் தரமான மனையின் சிறப்புகள்

 

  1. மனையின் தெற்கு, மேற்குப் பக்கங்களில் உயரமான குன்றுகள், மேடுகள்,கட்டிடங்கள் வருதல்.
  2. மனை சரியாக அமைந்து மனையின் நான்கு திசைகளிலும் சாலைகள் அமைந்திருத்தல்.
  3. மனைக்கு வடக்கு, கிழக்குடன் கூடிய மூன்று பகுதிகளில் சாலைகள் அமைந்திருத்தல்.
  4. மனைக்கு வடக்கு, கிழக்கு ஆகிய இருபுறங்களில் சாலைகள் இருத்தல்.
  5. மனைக்கு வடக்கு அல்லது கிழக்கில் சாலை அமைப்பு வருதல்.
  6. மனைக்குத் தெற்கு, மேற்குப் பக்கங்களில் உள்ள சாலைகள் மனையை விட உயரமாக இருத்தல்.
  7. மனைக்கு வடக்கு, கிழக்குப் பக்கங்களில் உள்ள சாலைகள் தாழ்ந்திருத்தல்.
  8. மனைக்கு மேற்கு, கிழக்குப் புறமுள்ள சாலைகள் வடக்கு நோக்கிச் சரிவாக இருத்தல்.
  9. மனைக்குத் தெற்கு, வடக்குப்புறமுள்ள சாலைகள் கிழக்கு நோக்கிச் சரிவு பெற்றிருத்தல்.
  10. மனைக்குத் தெருக்குத்தல் இருப்பின் அது வடக்கு, கிழக்கு, வடமேற்கு, மேற்கு ஆகிய உச்சப்பகுதிகளில் இருத்தல்.
  11. மனை சதுரம் அல்லது செவ்வக வடிவில் அமைந்திருத்தல்.
  12. மனை செவ்வக வடிவிலிருப்பின் அதன் நீளம் அகலத்தைவிட l 1/2 பங்குக்கு அதிகமாகவும் 2 பங்குக்கு மிகாமலும் இருத்தல்.
  13. மனை தென்மேற்கிலிருந்து வடகிழக்கு பகுதியை நோக்கி சரிவாக இருத்தல்.
  14. மனையின் மையப்பகுதியில் மேடோ, பள்ளமோ இல்லாதிருத்தல்.
  15. மனையின் நிருதி மூலை, மூலைமட்டத்திற்கு இருத்தல்.
  16. மனையின் வடகிழக்கு பகுதி அதிகமாக இருத்தல்.
  17. மனையின் வடகிழக்கு பகுதியை தவிர வேறு எந்த மூலைகளிலும் வளர்ச்சி இல்லாதிருத்தல்.
  18. மண்ணின் பாரம் தாங்கும் தன்மை அதிகமாக இருத்தல்.
  19. மனை இரண்டு பெரிய மனைகளுக்கு இடையில் அகப்பட்டு சிறிய மனையாக இல்லாதிருத்தல்.
  20. மனையின் எந்த பகுதியிலும் வெட்டிய அமைப்பு வாரதிருத்தல்.