முகம் பொலிவுடன் இருக்க சில எளிய முறைகள்..!
- வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும். இதனால் முகப்பொலிவு கிடைக்கும். கோடையில் இளநீர் பருகி வர வயிற்றில் எரிச்சல் நீங்கி குளிர்ச்சி உண்டாகும்.
- தினமும் குளித்த பிறகு முகத்திற்கு சந்தனக் கட்டையால் சந்தனக் கல்லில் உரைத்த சந்தனத்தை பூச வேண்டும்.
- தக்காளிப்பழத்தை வட்ட வில்லைகளாக நறுக்கி பருக்கள் மீது 15 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் கழுவி விடலாம்.
- பப்பாளிப் பழத்தை குழைத்து அதில் எலுமிச்சை சாறு சில சொட்டுகள் கலந்து முகத்தில் தடவி வர முகம் பொலிவடையும்.
- குங்குமப் பூவை தேங்காய்ப் பால் விட்டு அரைத்து பருக்கள் மீது தடவி வர பருக்கள் குறையும்.
- கடலை மாவு, பாசிப்பயறு மாவு இவற்றை பயன்படுத்தி முகத்தை கழுவி வர முகப்பரு குறையும்.
- மண்பானை தண்ணீரில் வெட்டி வேர் அல்லது நன்னாரி வேறை பொட்டலம் கட்டிப்போட்டு அந்த நீரை நாள் முழுதும் பருகலாம்.
- எலுமிச்சை சாறு, வெள்ளரிச்சாறு இரண்டையும் கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.
- எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்கள் முகத்தில் துவாரங்கள் பெரிதாக இருக்கும்.இதற்கு தக்காளிச் சாறு ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவி வர துவாரங்கள் இறுக்கமாகும்.
- வறண்ட சருமம் உள்ளவர்கள் அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து தடவி வர வறட்சி நீங்குவதோடு இறந்த செல்களையும் நீக்கி முகம் பொலிவடையும்.
- வாழைப்பழத்தை மசித்து அதனுடன் தேனை கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து பின் முகத்தை கழுவி வர முகம் பளபளக்கும்.
- பாலுடன் சில துளிகள் கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் பூசி வர முகம் பிரகாசமாகும்.