முகம் ஜொலி ஜொலிக்க கேரட் பேஸ் மாஸ்க்

முகம் ஜொலி ஜொலிக்க கேரட் பேஸ் மாஸ்க்

முகம் ஜொலி ஜொலிக்க கேரட் பேஸ் மாஸ்க்..!

காரட் சாப்பிடுவதால் நம் சருமத்தின் நிறம் பொன்போன்று ஜொலிக்கும்.

கேரட்டில் உள்ள சத்துக்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்பது நாம் அறிந்ததே. அதேபோல் கேரட் சாப்பிடுவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அந்த அளவிற்கு சருமத்தினை பளபளப்பாக வைக்க உதவுகிறது காரட்.

பழங்கள், காய்கறிகள் அதிலும் கேரட் மற்றும் பிளம்ஸ் சாப்பிட்டு வந்தால் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவரின் மேனியும் பொலிவு ஏற்பட்டு பளபளக்கும்.

இரண்டு கேரட்டினை எடுத்து நன்றாக கழுவி வேகவைக்கவும். அதனை மசித்து முகத்தில் அப்ளை செய்யவும். நன்றாக உலர வைத்து பின்னர் அதனை உரித்து எடுக்கவும். பின்னர் வெது வெதுப்பாக நீரில் பஞ்சினை நனைத்து முகத்திற்கு ஒத்தடம் கொடுக்கவும்.

வாரம் இருமுறை கேரட் மாஸ்க் போட முகம் பொன்னிறமாக ஜொலிக்கும்.

கேரட்டுடன் சர்க்கரை சேர்த்து கெட்டியாக அரைத்து அதை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்து வர முக சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

இறந்த செல்கள் இருந்தால் உதிர்ந்து விடும். புதிய ஆரோக்கியமான செல்கள் உற்பத்தியாகும்.

குறிப்பாக உடல் எடை ஆரோக்கியமாவதுடன், அதிக வசீகரத்துடன் காணப்படுவார்கள். வெறும் 2 மாதங்கள் மட்டுமே பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொண்டால் இதன் பிரதிபலனை உடனே உணர முடியும்.