முகப்பரு நீங்க எளிய வழிகள்

முகப்பரு நீங்க எளிய வழிகள்..!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. ஆனால் அந்த முகத்தில் ஏற்படும் பருக்கள் அனைத்து அழகையும் கெடுத்து விடுகிறது. இத்தகைய பருக்களை போக்க எளிய  வழிகளை பார்க்கலாம்.

 

நல்லெண்ணெய்:

நல்லெண்ணையில் வெள்ளைபூண்டு, துத்தி இலை இவைகளை போட்டு காய்ச்சி முகப்பரு மீது தடவி வர முகப்பரு மறையும்.

 

வெள்ளரி:

எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்கள் வெள்ளரிச்சாறு 4 ஸ்பூன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் தேன் இவை மூன்றையும் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர பருக்கள் மறைவதோடு நல்ல நிறத்தையும் கொடுக்கும்.

 

சந்தனம் :

முகப்பரு மறைய சந்தனம், மிளகு, ஜாதிக்காய் இவைகளை சேர்த்து அரைத்து முகப்பருவின் மீது தொடர்ந்து 10 நாட்கள் பூசி வந்தால் முகப்பரு வேரோடு மறையும்.

 

வேப்ப இலை மற்றும் மஞ்சள்:

வேப்ப இலையையும், சிறிது மஞ்சளையும் சேர்த்து அரைத்து பருக்களின் மேல் பூசி வர பருவை அழிக்கும். முகம் பளபளக்கும்.

 

வாழைத்தண்டு:

வாழைத்தண்டை பாதியாக பிளந்து முகப்பருவுள்ள இடத்தில் தினமும் 2 நிமிடங்கள் தேய்த்து பின் கழுவி வந்தால் பருக்கள் நீங்கி முகம் அழகாகும்.

 

பூண்டு:

முகப்பரு வராமல் தடுக்க பூண்டு மிகவும் சிறந்த மருந்து. இதனை உணவில் தாராளமாக சேர்த்து வருவதால் முகப்பரு மறைந்து முகம் பொலிவடையும்.

 

எலுமிச்சை சாறு: 

எலுமிச்சையின் சாற்றினைக் கொண்டு, பரு உள்ள இடத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினாலும்,  பருக்கள் நீங்கிவிடும்.