மிதுனம் லக்கனத்தில் பிறந்தவர்கள் பொதுவாக என்ன தொழில் செய்யலாம்

மிதுனம் லக்கனத்தில் பிறந்தவர்கள் பொதுவாக என்ன தொழில் செய்யலாம்?

 

முயற்சி இருந்தால் எந்த ஒரு தொழிலும் சாதனையை படைக்கலாம். 'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்' என்கிறது ஆன்றோர் மொழி. எனினும், எனது சொந்த ராசிப்படி நான் என்ன தொழில் செய்யலாம்? அல்லது செய்தால் ஓரளவு வெற்றி பெற முடியும்? என்று கேட்பவர்களுக்காக நான் ராசி அடிப்படையில் சில தொழில் ஆலோசனைகளை அளித்து உள்ளேன். உங்கள் சொந்த ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான பத்தாம் இடம் நன்றாக வலுப்பெற்று இருக்கும் பட்சத்தில் தாராளமாக கீழ்கண்ட தொழில்களை நீங்கள் செய்யலாம். அந்த விவரங்கள் வருமாறு…

ஜாதகத்தில் எந்த கிரகமானது வலிமை பொருந்தியிருகின்றதோ அதர்க்கேற்பவே அந்த ஜாதகனுடைய தொழிலானது அமைகின்றது.

புதனை அதிபதியாக கொண்ட மிதுன லக்கனத்தில் பிறந்த அன்பர்கள்ளே,

ஜோதிடம்,

கணிதம்,

இன்சூரன்ஸ் ,

பட்டிமன்றம்,

பேச்சினால் வருமானம் வரும் துறைகள் (அதாவது ஆசிரியர் துறை, கோயில்களில் பட்டிமன்றங்களில் உரையாடுதல்)

வழக்கறிஞர்,

அயல் நாட்டு தூதுவர் அல்லது முக்கிய அரசியல் பிரமுகர்,

நடிகர்களுக்கு PA வாக இருத்தல்,

மென்பொருள் துறை,

தபால் துறை ,

பொறியியல் துறை

என இவற்றில் ஏதேனும் ஒரு தொழில் அல்லது இது சம்மந்தமான உத்யோகம் பார்த்தால் சிறப்பாக இருப்பார்கள்.