மலக்குழி மற்றும் சாண எரிவாயுக் குழிகள் அமைக்கும் திசைகளும் பலன்களும்
மலக்குழி மற்றும் சாண எரிவாயுக்குழி ஆகியனவற்றை மனையின் வடக்கு அல்லது கிழக்குப் பகுதிகளில் மதில் சுவர் மற்றும் வீட்டு சுவர் ஆகியனவற்றிலிருந்து இடைவெளி விட்டு அமைத்தல் வேண்டும்.
மதில் வாயில், தலைவாயில்களுக்கு நேர் எதிரிலும், மாடிப் படிகளுக்கு அடியிலும் அமைத்தல் கூடாது. இவற்றின் மேல் மூடி வீட்டின் தரை மட்டத்தை விட உயரக் கூடாது. இக்குழிகளின் ஆழம் நீர்த்தொட்டியின் ஆழத்தைவிட மிகக் கூடாது. இக் குழிகளுக்கும், நிலத்தடி நீர்த்தொட்டிகளுக்கும் இடையில் போதிய இடைவெளி இருத்தல் வேண்டும். சாண எரிவாயுக் குழி பொதுவாக வட்டமாகவே அமைக்கப்படுகிறது. இதற்காகச் சேகரிக்கப்படும் சாணத்தை வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சேமித்து வைத்தல் கூடாது.
மலக்குழி மற்றும் சாண எரிவாயுக் குழிகள் அமைக்கும் திசைகளும் பலன்களும்:
1. வடக்கு
நற்பலன்கள் தரும். செல்வம் தரும். சுபம்.
2. வடகிழக்கு
தீய பலன்கள் தரும். முன்னேற்றம் கெடும். உடல் நலனும், செல்வமும் கெடும்.
3. கிழக்கு
நற்பலன்கள் தரும். முன்னேற்றம் தரும்.
4. தென்கிழக்கு
தீய பலன்கள் தரும். பெண்கள் உடல் நலம் கெடும். பிரச்சனைகள்,தடைகள், கடன், பொருளாதார நெருக்கடி, திருட்டு, தீ விபத்துக்கள் ஆகியன உண்டாகும்.
5. தெற்கு
தீய பலன்கள் தரும். பெண்கள் உடல் நலம் கெடும். தீராத நோய்களை தரும்.அவப் பெயர் உண்டாகும். குடும்ப கௌரவம் கெடும். நிம்மதி கெடும்.பெண்களுக்கு அகால மரணமும் தரும்.
6. தென்மேற்கு
மிகத்தீய பலன்கள் தரும். உடல் நலனும், முன்னேற்றமும், செல்வமும் அழியும். குடும்பத்தை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்லும். விபத்துக்களும், அகால மரணமும் தரும்.
7. மேற்கு
தீய பலன்கள் தரும். ஆண்கள் உடல் நலம் கெடும். தீராத நோய்களைத் தரும். முன்னேற்றம் கெடும். அவப்பெயர் உண்டாகும். குடும்ப கௌரவம் கெடும். நிம்மதி கெடும். ஆண்களுக்கு அகால மரணமும் தரும்.
8. வடமேற்கு
தீய பலன்கள் தரும். பகை, சண்டை , சச்சரவுகள், வழக்குகள், பொருளாதர நெருக்கடி ஆகியன உண்டாகும். வறுமை சேரும். நிம்மதி கெடும்.